Sunday, 18 December 2011

நாங்களும் பிளான் பண்ணுவோமில்ல???

ஒரு மாதம் முன்பு -
என் கணவர் - 'ஸ்ருதிக்கு எப்போ லீவ் விடறாங்க?'
நான் - ஏன்பா?
அவர் - நாம  சிங்கப்பூர் போகலாம்னு பார்க்கறேன்.
நான், குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் இல்லையே என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

10 நாட்களுக்கு பிறகு -
அவர் - நாம ஸ்ருங்கேரி(கர்நாடகா) போகலாமா லீவுக்கு ?
நான் -  சிங்கப்பூர் என்னாச்சு?
அவர் - எனக்கு ஒரு வாரம் லீவ் எடுக்கறது கஷ்டம்..
நான் - ஓகே.

இன்னும் சில நாட்களுக்கு பின்..
நான் - மங்களூர் கு டிக்கெட் எடுத்தாச்சா?
அவர் - அது, இப்போ அங்க சீசன் சரி இல்ல..
நான் - அப்போ, லீவ் ?
அவர் - ம்ம்..சுருதிகு வண்டலூர் ஜூ காட்டினா என்ன?

நான் ஒரு மாதம் முன்பே சிதம்பரம் போக டிக்கெட் புக் பண்ணியாச்சு. அத கடைசி நிமிஷம் வரை மாத்தர உத்தேசம் இல்ல. இதை சொன்னதும் என் கணவர் முகத்தில் client டிடம்  extra billing ஐ ஓகே பண்ணின நிம்மதி!

என்னை போலவே எல்லா 'சாப்ட்வேர் மனைவிகளும்' அப்பாவி(!)யாக தான் இருக்கிறார்களா என்று யாரவது சொன்னால் தேவலை..

பின்குறிப்பு - நான் ஊருக்கு போனதும், ஜனகராஜ் போல 'என் பொண்டாட்டி ஊருக்கு போய்டா !' என்று கத்துகிறாரா என்று மாமனாரை பார்க்க சொல்லி இருக்கிறேன். ..

3 comments:

  1. Subramanian says

    All the husbands act one way or other.இது வலிக்காத நடிப்பு

    ReplyDelete
  2. Subramanian says

    All soft ware Engineers' wife book the tickets first for them(including husband) and only tell them to take leave. Why don't you try that method?

    ReplyDelete
  3. டாக்டரின் மனைவி படும்பாடு என்ற தலைப்பில் என் மனைவி ஒரு வாரம் தொடர்ந்து சொற்பொழிவு ஆற்ற வல்லமை கொண்டுள்ளால்

    ReplyDelete