Monday, 5 December 2011

superstar கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பொதுவாக பெண்களின் வயதை கண்டுபிடிக்க " உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?" என்று கேட்டு பாருங்கள். சிவாஜி,எம்.ஜி.ஆர் என்று சொன்னால் ஒரு 50+ என்றும், கார்த்திக் , மோகன் வகையறா என்றால் 35+ என்றும் விஜய், அஜித் என்றால் 25 - 35 என்றும் வயதை கணிக்கலாம். பதில் "ரஜினி" என்றால் அந்த பெண்ணின் வயது '6ல் இருந்து 60 வரை' எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

எனக்கு ரஜினி பிடிக்க காரணம் ' காதலின் தீபம் ஒன்று' பாடலே. இளையராஜாவின் இன்னிசையும்,SPB யின் தேன்குரலையும் மீறி அதில் தெரிவது "ரஜினி" மட்டுமே.

மற்றொரு காரணம், ரஜினி படம் பார்க்க கர்சிப் முதல் ஜமுக்காளம் வரை எடுத்து கொண்டுபோய் பிழிய பிழிய அழத் தேவையே இல்லை. பெரும்பாலான படங்கள், தலைவர் வாழ்கையில் ஜெயித்து, காதலியை கரம் பிடித்து, வில்லனை(பெண்ணை பெற்றவர்?)  திருத்தி அல்லது போலீசில் பிடித்து கொடுத்து நமக்கும் சில அட்வைசுடன் --'சுபம்' ஆக முடியும். ( நடுவே punch dialogue மற்றும் தனக்கு ஏன் தமிழ் அல்லது தமிழ் நாடு பிடிக்கிறது என்று ஒரு பாடல் + 3 காதல் பாடல்கள் + 1 சோகத்துடன் கூடிய  அட்வைஸ் பாடல் சேர்த்து கொள்ளவும்.)   கொடுத்த காசுக்கு, நம்மை சந்தோஷத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்..

ரஜினி போன்று வேறு யாராவது ஒரு நடிகர் ஸ்டைல் செய்தால், அது மிகவும் கோமாளிதனமாகவே இருக்கிறது!! நல்ல வேலையாக அந்த நடிகர் இப்போது வேறு 'இம்சை'க்கு மாறி விட்டார்..

இத்தனை லட்சம் பேர் விரும்பும் ஒருவர் மிக அடக்கமாக இருப்பதால், அவர் சூப்பர் நடிகரோ இல்லையோ கண்டிப்பாக சூப்பர் மனிதர் தான் !

இன்று FM ரேடியோ முதல் தொலைக்காட்சி வரை ரஜினியின் பிறந்தநாளை நினைவூட்டிக்கொண்டே இருப்பதால், என் பிறவி பெருங்கடலை கடக்க நானும் இந்த பதிவின் மூலம் வாழ்த்துகிறேன்..

 மேலே சொன்ன லட்சம் பேரில் ஒருத்தியாக திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

5 comments:

  1. I agree to your statement. There are some kids who dont know his name but still like him :)
    Sreenivasan
    Http://Sreenivasan.ksshouse.com

    ReplyDelete
  2. V,Subramanian says

    I do not know if Rajani kant can see this. If he sees this you will be made Propaganda Secretary when he starts his own party(He himself do not know when he is going to start one. Till such time you may have wait)

    ReplyDelete
  3. எனக்கு ரஜினி பிடிக்க காரணம் ' காதலின் தீபம் ஒன்று' பாடலே. இளையராஜாவின் இன்னிசையும்,SPB யின் தேன்குரலையும் மீறி அதில் தெரிவது "ரஜினி" மட்டுமே.

    - yepppppaaa... chance-ae illeenga.
    i used to tell my friends and wife... rajini "nadichu" enakku pudichadhu na, adhu 2 padangal dhaan.. 1) 6-il irundhu 60 varai, 2) kaadhalin dheebam ondru - song.
    yes, he's acted superbly in that song.

    ReplyDelete
  4. உலக சாதனைப் பாடகன் ,பாட்டு தலைவன் , பாடும் நிலா - எஸ்.பி.பி. நான்கு தலை முறை பாடகன் - இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .இவருக்கு கிடைத்த அவார்ட் பல
    அது போல் இளையராஜாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்..
      நான் சொல்லவந்தது அதுவல்ல, அத்தனை இனிமையான விஷயங்களையும் தாண்டி, அந்த பாடலில் அவர் உடல் மொழி நம்மை ரசிக்க வைக்கின்றது.

      இது என் தனிப்பட்ட கருத்து தான். :-)

      Delete