Wednesday, 25 January 2012

திருவள்ளுவர் சொல்ல வந்தது என்ன??

பள்ளி நாட்களில் படித்த குறள் -

 தோன்றிற் புகழொடு தோன்றுக அ  திலார்
 தோன்றலின் தோன்றாமை நன்று.

இதை படிக்கும் போது, பிறந்தா அம்பானி பையனாவோ- ரஜினிகாந்த் பெண்ணாவோ பிறக்கணும்; இல்ல, பிறக்காம இருக்கறது பெட்டர்னு அபத்தமாக நினைத்திருந்தேன். ஆனால் இந்த விளக்கம் கொஞ்சம் harsh ஆக , வள்ளுவர் ஸ்டைலில் இல்லாத மாதிரி இருந்தது. மேலும், யோசிக்க தேவையில்லாதபடி அடுத்த வகுப்புக்கு மாறிவிட்டேன்..

மனதின் ஓரம் இருந்த கேள்விக்கு சமீபத்தில் convincing ஆன விளக்கம் கிடைத்தது.  'தோன்றின்' என்பது பிறப்பது அல்ல. 'சபையின்(அவையின்) முன் தோன்றுதல்' என்பதே.. 

அதாவது, நீங்கள் ஒரு well -known personality ஆக இருந்தால் சபையில் உங்கள் பேச்சு எடுபடும். 

இது யாருக்கு தெரிந்திருக்கோ இல்லையோ, டிவிகாரர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.. உதாரணமாக, மந்திரா பேடியை விட உங்கள் பக்கத்துக்கு வீட்டு கோபாலுக்கு கிரிகெட் பற்றி அதிகம் தெரிந்திருக்கலாம்..ஆனால், யார் 'தோன்றினால்' எல்லாரும்(நீங்கள் உட்பட) பார்ப்பீர்கள்?Wednesday, 11 January 2012

இவங்கள நீங்க எப்டி சமாளிக்கறீங்க?

காலை வேலை பரபரப்பில் -
வாசலில் மேடம், மேடம் என்று ஒருவர் (கையில் 40 பக்க நோட்டு)
"நாங்க orphanage / old age  ஹோம் நடத்தறோம். உங்களால முடிஞ்சத செய்யுங்க"
நான் - 'நேத்து தானே ஒருத்தர் வந்தார்'.
இப்போது வந்தவர் முகம் மாறுகிறது. சிலர் ஏமாற்றுவதால், தன்னை போல நல்லவர்கள் பாதிக்கபடுவதாக பே...ச ஆரம்பிக்கிறார்.
           எனக்கோ கடிகாரமும், டிபன் பாக்ஸ்களும் அதிகம் பயமுறுத்துகிறது. அவரை போக செய்யும் அளவுக்கு, பணம் கொடுத்து விட்டு உள்ளே பாய்கிறேன்.

மதியம் நன்கு தூக்கம் வரும் போது -
மேடம் மேடம் என்ற குரல் கேட்கிறது.
வாசலில் washing machine / vacuum cleaner விற்பனை பிரதிநிதி (அட, salesman தாங்க)
"உங்க வீட்ல washing machine / vacuum cleaner இருக்கா  ? "
நான் - இருக்கு, இருக்கு !
"எந்த மாடல் use பண்றீங்க?"
சொன்னேன்..
"எப்போ வாங்கினீங்க? எத்தன முறை சர்வீஸ் வந்தாங்க? ? ?????  "
நானும் தூக்க கலக்கதிலில்  எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல,
"உங்களோடது பழைய மாடல். நாங்க அத ரெண்டா.....யிரம் ரூபாய்க்கு எடுத்துக்குறோம். எங்களுது வெறும் பதினஞ்சு ஆயிரம் கொடுத்து வாங்கிகோங்க."
நான் - 'ஆனா, அது சரியாதாங்க வேல செய்யுது'.
"இல்லங்க. எப்டியும் இன்னும் 3 மாசத்துல ரிபேர் வரும்."
நான் - (மனதுக்குள்) அடப்பாவி!
நான் - 'இப்போ எங்களால அவ்ளோ செலவு பண்ண முடியாதுங்க'.
"பரவாயில்ல. எங்க கிட்ட EMI Scheme இருக்கு"
நான் - 'ங்கே'  (இனி எங்கிருந்து தூங்கறது?)
           ஒருவாறு அவரை ஞாயிற்று கிழமை வாங்க ன்னு சொல்ல, அவர் landline நம்பர் , செல் நம்பர், அட்ரஸ், இத்யாதி,இத்யாதி என்று என் ஜாதக கட்டை தவிர எல்லாம் வாங்கி செல்கிறார்..

இன்னும், கதவை பூட்டி வெளியில் கிளம்பும் போது வரும் கிரெடிட் கார்டு போன் கால், ராங் நம்பர் செய்து சண்டையிடும் ஆசாமிகள் என தினம் தினம் அனுபவித்ததில்..


                 ஒரு நாள் மலை உச்சியில் நின்று, இனி நானும் எல்லாரையும் மொக்கை போடபோவதாக சபதம் செய்து கொண்டேன்!

சொன்னபடியே blog  ஆரம்பித்து விட்டேன். இப்போ நீங்களும் மாட்டிகிடீங்க, இல்ல??


Monday, 9 January 2012

உங்களுக்காவது ஹிந்தி தெரியுமா?

என் பெண்ணை முதல் வகுப்பில் போடும்போது, ஹிந்தியா,தமிழா என்று கேட்டார்கள். நானும் அவள், கபீரையும் ,துளசி தாசரையும் தெரிந்து கொள்ளட்டும்; பாரதியயும், கம்பனையும் நாம் அறிமுக படுத்துவோம் என்று எண்ணி ஹிந்தியை second language ஆக எழுதி கொடுத்தேன்.

ஒரு முறை ஸ்ருதியோடு பள்ளிக்கு சென்ற போது, ஹிந்தி டீச்சர் வந்து உங்களோடு தனியாக பேச வேண்டும் என்றார். ( எனக்கு தமிழ் சினிமா டாக்டர் ஞாபகம் வந்தது - பேஷண்டோடு வருபவரை பார்த்து இப்படி தான் சொல்வார். நாமும் சரி, ஏதோ கெட்ட செய்தி என்று முடிவு கட்டலாம்! )
டீச்சர் ( என்னிடம்) : உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?
நான் :  ஓ! (மனதுக்குள் - தோடி தேர் மெய்ன் platform number ஏக் பர் காடி ராவானா ஹோகி தானே ஹிந்தி ??) 
சுருதி இம்முறை ஹிந்தியில் வெறும் 83 சதவிகிதம் மட்டுமே(!) எடுத்திருப்பதாகவும், வீட்டில் சொல்லி தருவது அவசியம் என்றும் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை..நானெல்லாம் சிறுவயதில் இந்த மார்க் எடுத்தால், வீட்டில் ஒரு வாரத்திற்கு கேட்டதெல்லாம் கிடைத்திருக்கும்!


எனக்கு ரொம்ப ரோஷமாகி, ஹிந்தி சொல்லி தர ஆரம்பித்தேன். 'த, த்த, தா, த்தா' என்று தினமும் சொல்லபோக அக்கம்பக்கம் இருப்பவர்கள்லேலாம், "சரிதான் ! அம்மணி வீட்டுக்குள்ளே ஆடு ஓட்டுது. நல்லா தானே இருந்துச்சு" என்று கிசுகிசுக்க ஆரம்பிக்க - எனக்கே பாயை பிறாண்டனும் போல தோன்றுகிறது..

அட, நானாவது பரவாயில்லை - என் கணவர் இன்னமும் 'ஏக் காவோம் மெய்ன் ஏக் கிசான் ரகு தாத்தாவா இல்ல ரகு சித்தப்பாவா' என்று யோசித்து கொண்டிருக்கிறார்..

பின்குறிப்பு : இப்போது அவள், ரயிலில் உள்ள ஹிந்தி வார்த்தைகளை படிக்கும் போது, என் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாக தோன்றுகிறது..