Monday, 9 January 2012

உங்களுக்காவது ஹிந்தி தெரியுமா?

என் பெண்ணை முதல் வகுப்பில் போடும்போது, ஹிந்தியா,தமிழா என்று கேட்டார்கள். நானும் அவள், கபீரையும் ,துளசி தாசரையும் தெரிந்து கொள்ளட்டும்; பாரதியயும், கம்பனையும் நாம் அறிமுக படுத்துவோம் என்று எண்ணி ஹிந்தியை second language ஆக எழுதி கொடுத்தேன்.

ஒரு முறை ஸ்ருதியோடு பள்ளிக்கு சென்ற போது, ஹிந்தி டீச்சர் வந்து உங்களோடு தனியாக பேச வேண்டும் என்றார். ( எனக்கு தமிழ் சினிமா டாக்டர் ஞாபகம் வந்தது - பேஷண்டோடு வருபவரை பார்த்து இப்படி தான் சொல்வார். நாமும் சரி, ஏதோ கெட்ட செய்தி என்று முடிவு கட்டலாம்! )
டீச்சர் ( என்னிடம்) : உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?
நான் :  ஓ! (மனதுக்குள் - தோடி தேர் மெய்ன் platform number ஏக் பர் காடி ராவானா ஹோகி தானே ஹிந்தி ??) 
சுருதி இம்முறை ஹிந்தியில் வெறும் 83 சதவிகிதம் மட்டுமே(!) எடுத்திருப்பதாகவும், வீட்டில் சொல்லி தருவது அவசியம் என்றும் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை..நானெல்லாம் சிறுவயதில் இந்த மார்க் எடுத்தால், வீட்டில் ஒரு வாரத்திற்கு கேட்டதெல்லாம் கிடைத்திருக்கும்!


எனக்கு ரொம்ப ரோஷமாகி, ஹிந்தி சொல்லி தர ஆரம்பித்தேன். 'த, த்த, தா, த்தா' என்று தினமும் சொல்லபோக அக்கம்பக்கம் இருப்பவர்கள்லேலாம், "சரிதான் ! அம்மணி வீட்டுக்குள்ளே ஆடு ஓட்டுது. நல்லா தானே இருந்துச்சு" என்று கிசுகிசுக்க ஆரம்பிக்க - எனக்கே பாயை பிறாண்டனும் போல தோன்றுகிறது..

அட, நானாவது பரவாயில்லை - என் கணவர் இன்னமும் 'ஏக் காவோம் மெய்ன் ஏக் கிசான் ரகு தாத்தாவா இல்ல ரகு சித்தப்பாவா' என்று யோசித்து கொண்டிருக்கிறார்..

பின்குறிப்பு : இப்போது அவள், ரயிலில் உள்ள ஹிந்தி வார்த்தைகளை படிக்கும் போது, என் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாக தோன்றுகிறது..


4 comments:

  1. மனதுக்குள் - தோடி தேர் மெய்ன் platform number ஏக் பர் காடி ராவானா ஹோகி தானே ஹிந்தி ??) - pinneetteenga ponga.

    ReplyDelete
  2. எனக்கு ஒன்றும் புரியவில்லை..நானெல்லாம் சிறுவயதில் இந்த மார்க் எடுத்தால், வீட்டில் ஒரு வாரத்திற்கு கேட்டதெல்லாம் கிடைத்திருக்கும்!
    - super.... marku marku... eppo dhaan namma kalvi murai maarumo?

    ReplyDelete
  3. ஹெஹெஹெ.... ஹய்யோ ஹய்யோ...

    ReplyDelete
  4. நானும் என் தமிழ் மேலுள்ள கர்வத்தால் என் பெண்ணையும் (ஸ்ரீநிதி) ஹிந்தி வகுப்பில் சேர்த்துள்ளேன் எனக்கு சுட்டுபோட்டாலும் என்ன பொங்க வச்சாலும் கூட ஹிந்தி வராது.. இப்ப என் மனைவி தான் தினமும் என்னை சபித்து கொண்டு அவளும் படித்து கொண்டு மகளுக்கும் பாடம் நடத்துகிறாள் - எப்படியோ ஒரே கல்லில் இரண்டு மாங்கா.. மகளும் மனைவியும் ஹிந்தி கத்துகிட்ட நமக்கு வசதி தானே

    ReplyDelete