Wednesday, 25 January 2012

திருவள்ளுவர் சொல்ல வந்தது என்ன??

பள்ளி நாட்களில் படித்த குறள் -

 தோன்றிற் புகழொடு தோன்றுக அ  திலார்
 தோன்றலின் தோன்றாமை நன்று.

இதை படிக்கும் போது, பிறந்தா அம்பானி பையனாவோ- ரஜினிகாந்த் பெண்ணாவோ பிறக்கணும்; இல்ல, பிறக்காம இருக்கறது பெட்டர்னு அபத்தமாக நினைத்திருந்தேன். ஆனால் இந்த விளக்கம் கொஞ்சம் harsh ஆக , வள்ளுவர் ஸ்டைலில் இல்லாத மாதிரி இருந்தது. மேலும், யோசிக்க தேவையில்லாதபடி அடுத்த வகுப்புக்கு மாறிவிட்டேன்..

மனதின் ஓரம் இருந்த கேள்விக்கு சமீபத்தில் convincing ஆன விளக்கம் கிடைத்தது.  'தோன்றின்' என்பது பிறப்பது அல்ல. 'சபையின்(அவையின்) முன் தோன்றுதல்' என்பதே.. 

அதாவது, நீங்கள் ஒரு well -known personality ஆக இருந்தால் சபையில் உங்கள் பேச்சு எடுபடும். 

இது யாருக்கு தெரிந்திருக்கோ இல்லையோ, டிவிகாரர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.. உதாரணமாக, மந்திரா பேடியை விட உங்கள் பக்கத்துக்கு வீட்டு கோபாலுக்கு கிரிகெட் பற்றி அதிகம் தெரிந்திருக்கலாம்..ஆனால், யார் 'தோன்றினால்' எல்லாரும்(நீங்கள் உட்பட) பார்ப்பீர்கள்?



5 comments:

  1. joining the club in being stupid about the first interpretation. we were too busy cramming to think through.. + that is what teachers taught too. Example:In this website:
    http://www.tamilcube.com/thirukkural/TamilCube_Thirukkural_Tamil_English.pdf

    Be born with fame if birth you want 236
    If not of birth you must not vaunt.

    << Makes me wanna say
    translate you can; only if right
    If not of translate you must not vaunt>>

    Anyways, I liked another version too given below:
    மு.வ : ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

    If you pursue you need to seek excellence - Dont be among the "also ran" - This resonates more with me..

    (But hands down- Mandira bedi will draw more crowd- no brainer...:)))

    ReplyDelete
  2. vigna நான் எங்க வீட்டு பக்கத்தில் இருப்பவர் வரும் program தான் நான் பார்பேன். எனக்கு தெரிஞ்சவர் டிவி ள்ள வந்தா அதை தான் பார்பேன். லொள் .

    ReplyDelete
  3. மந்த்ராபேடி ஒரு லேடி என்பதால் அவரைத்தான் பார்ப்பேன், அதுவே அந்த வி ஐ பி ஆண் என்றால், அவிஐபி பெண் என்றால் பெண்ணைத்தான் பார்ப்பேன்

    ReplyDelete
  4. புகழ் அதிகாரத்தில் மற்ற குறள் எல்லாம் புகழை நாம் தற்போது பயன்படுத்தும் அர்த்தத்தில் குறிக்காது எனவே இந்த குறளுக்கும் விளக்கம் பின்வருமாறு
    “தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று”
    பிறந்தால் உயிர்களிடத்தில் அன்பு, கருணை உள்ளவனாக/ உள்ளவளாக தோன்றட்டும், இல்லை என்றால் அப்படி ஒரு உயிர் பிறப்பதை காட்டிலும் பிறக்காது இருப்பதே இந்த உலகுக்கு நல்லது.
    எனக்கும் இந்த விளக்கம் பொருத்தமாக படுகிறது.
    எங்கோ எவர் சொல்லியோ கேட்டது

    ReplyDelete
  5. இறந்துபோனவரின் புகைப்படத்தில் தோற்றம்,மறைவு என பார்த்ததால் எனக்கும் அந்த குழப்பம் இருந்தது.இப்ப தெளிவாயிட்டு...எல்லா அதிகாரத்தையும்(திருக்குறள்) நீங்க எடுத்துக்கோங்க..தெளிவுரை எழுதுங்க..வாழ்த்துக்கள்:-))

    ReplyDelete