Wednesday, 1 February 2012

ஆதலினால் காதல் செய்வீர்!


நான் வளர்ந்தது முழுக்கவே கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத பேரூர். காலையில் பொடி நடையாக வீட்டை விட்டு கிளம்பினால் இரவுக்குள் எல்லா தெருவையும் சுற்றி விட்டு வந்துவிடலாம். அதனால், அடிக்கற கலரில் தாவணி கட்டி, வயல் வரப்பில் 'மாமா...' ன்னு  பாடிகிட்டே ஓடிவர்ற ஸ்லோமோஷன் காட்சியெல்லாம் என் கதையில் வரவேயில்லை..இன்னும் சொல்லபோனால், காதல்-கத்திரிக்காய் ரெண்டுமே வசமானது கல்யாணத்துக்கு அப்புறம் தான்..

அதுக்காக காதல் என் வாழ்கையில் வராமல் இல்ல..அடிக்கடி தனியே சிரித்து கொள்ளும் தோழி, திடீர் வைரமுத்து ஆன நண்பன், அடுத்த ஞாயிறுக்குள் அழகாகிவிட துடிக்கும் face -pack ஹாஸ்டல் பூச்சாண்டிகள், அர்த்தராத்திரியில் எழுந்து, எனக்கும் சேர்த்து தெலுங்கு சொல்லிதர முடிவெடுத்த ரூம் மேட் என பல காதல்களை கடந்தே வந்திருக்கிறேன்..(காதலர்களை விட காதல், நண்பர்களையே பாடாய்படுத்தும் - அனுபவம்) 

சினிமா காதல் கூட என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை..இங்கே காதலில் வெற்றி பெற சில 'கல்யாண குணங்கள்' தேவைபடுகிறது. நாயகன் - மிகுந்த நல்லவனாகவும், 10 பேரையாவது அடிக்க தெரிந்தவனாகவும், பாட்டு,டான்ஸ் என்று வந்தால் கூட ஆட 10-20 தோழர்களையும் சேர்த்து வைத்திருப்பவனாகவும் இருந்தால் போதுமானது..நாயகி - அழகியாக(கொஞ்சம் லூசாக) இருந்தால் கண்டவுடன் காதல் தான்..நாமும் குறைந்த செலவில் பாரின் சுற்றி பார்க்கலாம்..     

நிஜத்தில் காதலுக்கு சில qualities தேவை என்று கண்டிருக்கிறேன்  - தைரியம், உறுதி, புற தோற்றத்தை தாண்டியதொரு நேசம் மற்றும் தனி நபர் சுகந்திரம் - இவை அவசியம்.முன்னிரண்டும் கல்யாணத்திற்கு முன்பும், பின்னிரண்டும் கல்யாணத்திற்கு பிறகும் அத்தியாவசியமாகிறது.. Ego கூட கொஞ்சமாக இருந்தால் பாதகமில்லை ..ஏனெனில் ஊடல் இல்லாத காதலில் சுவாரசியமில்லை! (அப்புறம் எங்களை போன்ற நண்பர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்)

நான் புரிந்து கொண்ட வரையில், ஒருவரை பிடித்து போக காரணங்கள் ரொம்ப அவசியமில்லை (வேண்டுமானால், பின்னர் கற்பித்து கொள்ளலாம்). ஆனால் பிடிக்காமல் போக, காரணம் அவசியம்.(மாறி இருந்தால் உங்களிடம் எதோ பிசகு!)

எங்கள் வீட்டில், (குழந்தைகளோடு விளையாடும் போது எப்படி அவர்கள் ஜெயித்தால் மகிழ்வேனோ அப்படி) என் கணவரோடு வரும் சின்ன சண்டைகளில் அவர் ஜெயித்தாலும் சந்தோஷமாகவே இருக்கிறது. ஒருவேளை இது தான் காதலா?? அப்படியாயின் பாரதியின் வரிகளை தயக்கமில்லாமல் வழிமொழிவேன்..

                     'ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே!'

10 comments:

 1. ஒரு காதல் கவிதை இதோ -

  ‘நீ வீதியில் இறங்கியபோது
  சாரலாகத்தான் தொடங்கியது
  மழை
  குடை விரித்த
  கோபத்தில்தான்
  கொட்டித் தீர்த்துவிட்டது’
  -ஆர்.சி.மதிராஜ்

  ReplyDelete
 2. Lovely post :) nice write up, melotama unga love kula jasthi pogama romba naasuka ezhudhirkinga :)

  ReplyDelete
 3. This one, I really enjoyed. சுகமான தமிழ்...(no equivalent English can express this
  feeling)- Also fully agree with Rak's kitchen about you not revealing much yet sharing your convictions- Makes us curious for more it is for you.. & viola we have a successful write with a lot of mystery about her.. Kavidhaiyum Lovely..

  ReplyDelete
 4. நல்ல பதிவு. இன்னும் கொஞ்ச நாள் draft mode ல் வைத்திருந்து அழகாக பத்தி பிரித்திருந்தால் பெரிய பெரிய கட்டுரையாக வரக்கூடிய stuff எழுத்தில் இருக்கிறது என்றே எனக்குப் படுகிறது.நேரமும் முயற்சியும் வரட்டும்.வாழ்த்துக்கள்!

  இன்னும் இரண்டு மூன்று மாதம் கழித்து இந்த பதிவை நீங்களே படிக்கும்போது நிறைய develop செய்யலாம் என்று தோன்றும். அதை உடனே செய்துவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Boy, Loved this feedback too.. Equally valuable.. God, I need more time to read those blogs too.. @vigna.. Thank you for opening another world for me...

   Delete
  2. Very insightful feedback... Just disagree about the draft mode- COs I may have never gotten to read this NOW.... :)

   Delete
 5. //நான் வளர்ந்தது முழுக்கவே கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத பேரூர். காலையில் பொடி நடையாக வீட்டை விட்டு கிளம்பினால் இரவுக்குள் எல்லா தெருவையும் சுற்றி விட்டு வந்துவிடலாம். அதனால், அடிக்கற கலரில் தாவணி கட்டி, வயல் வரப்பில் 'மாமா...' ன்னு பாடிகிட்டே ஓடிவர்ற ஸ்லோமோஷன் காட்சியெல்லாம் என் கதையில் வரவேயில்லை..// கலக்கலான இந்த வரிகளிலிருந்து பதிவை ஆரம்பித்ததுதான் மிகச் சரி.நிறைய எழுதுங்கள். நல்ல பதிவு.இணையம் மற்றபதிவுகளைப் படிப்பதில் நேரத்தை உறிஞ்சிவிடும். அதை நம் பதிவுகளை எழுதுவதில் திருப்புவதுதான் வெற்றி என்று எனக்கு ஒரு பதிவர் சமீபத்தில் அறிவுறுத்தினார். அதைப் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி!

  ReplyDelete
 6. அப்படியே 'follow by mail" widget ஐயும் இணைத்துவிடுங்கள்.google id இல்லாதவர்கள் நீங்கள் பதிவு போட்டதை அறிந்து கொள்ள அதுதான் உதவும்.

  ReplyDelete
 7. ha ha ha ....nice read....yaaru pa antha facepack payithiyangal... hope it wasn't me :-)..thidir vairamuthu aana nanban yaarupa...konjam sollu ..santhosha pattukuraen :-)

  ReplyDelete