Friday, 3 February 2012

இந்த காதல் வேண்டாமே..

முந்தய பதிவின்  ஒரு பின்னோட்டத்தில் பாகம் - 2 எழுத சொல்லி ஒரு சக பதிவர் கேட்டிருந்தார்.யோசித்து பார்த்ததில் நான் எழுதியதை விட எழுதாததே அதிகம். அதே போல் சினிமா மேல் அப்படி என்ன கோவம் என்றும் தோழி கேட்டாள். 

சினிமாவில் ஒரு பெண்ணை காதலில் விழவைக்க, நாயகன் தன நண்பர்களோடு அந்த பெண் போகும் இடமெல்லாம் போவதும் , கெஞ்சுவது முதல் மிரட்டுவது வரை செய்து பார்ப்பதும் (இது உண்மையில் eve teasing - சட்டப்படி  குற்றம்) காதலாகிறது. உண்மையில் அப்படி செய்தால் அந்த பெண் எப்படி வீட்டுக்குள் சுருங்கி போகிறாள்; அனாமதேய காதல் கடிதங்களால் பெற்றவர்கள் எப்படி ஒரு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அழகாய் இருக்கும் ஒரே காரணத்தினால் பட்டாம்பூச்சியாய் இருக்க வேண்டிய பெண்ணை பட்டுபூச்சியாய் மாற்றியதுதான் காதலா என்ன? இதனால், பெரும்பாலும் படிப்பை மூட்டைகட்டி பெண்ணுக்கு அவசரம் அவசரமாக கல்யாணம் செய்து விடுகிறார்கள். அவளும் தன் திறமை என்ன என்று கண்டறிவதற்குள், தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளபடுகிறாள்.  

இது ஒருபுறம் என்றால், சில ஆண்டுகளுக்கு முன் என் வீட்டில் வேலைசெய்தவர்  ஒரு நாள் அழுதுகொண்டே வந்து, தன் பதினைந்து வயது பெண் அருகிலுள்ள மெகானிக் கடையில் வேலை செய்யும் பையனோடு ஓடி விட்டதாக சொன்னார். 'தங்களை போன்றவர்களுக்கு மானம் மட்டுமே ஒரே சொத்து, இப்போது அதுவும் போனதால் மற்ற குழந்தைகளின் எதிர்காலம் கேள்விகுறி ஆகிவிட்டது ; பத்தாவது கூட முடிக்காத தன் பெண், இனி தன்னை போலவே வேலைகாரி ஆகதான் முடியும்; அதற்காகவா இவ்வளவு கடுமையாக உழைத்தேன்' என்றும் அவர் கண்ணீர் சிந்தியதை வாழ்நாளில் மறக்க முடியாது..

முகம் தெரியாத அந்த பையனின் மேலிருந்த என் கோவம், நாளடைவில் இதுபோன்ற uniform காதலை நியாயபடுத்தும், தட்டி கேட்கும் பெற்றோர்களை வில்லன்களாக்கும் சினிமாமேல் திரும்பியது. இவர்களுக்கு சமூக அக்கறையே கிடையாதா என்று யோசித்து பார்த்ததில், சினிமாகாரர்களின் அதிகபட்ச கவலை நல்ல producer கிடைப்பதோடு முடிந்துவிடுவதாக தோன்றியது.  

ஆனால் நாம் ஒன்று செய்யமுடியும் - இது போன்ற தவறான செயல்களை நியாயபடுத்தும் சினிமாவை புறகணிக்கலாம், அல்லது குழந்தைகளையாவது அழைத்து செல்லாமல் தவிர்க்கலாம்.  

பதின் பருவத்தில் emotional balance குறைவாக இருக்கும். 'தான் கவனிக்கபடுகிறோம்' என்பதே காதல் வர போதுமானது. visual ஆக பார்க்கும் எதுவும் மனதில் ஆழமாகவே பதியும். அதனால், ஆரம்பம் முதலே நம் குழந்தைகளுக்கு சரியான உலகத்தை காட்டுவோம்..

விளையாட்டு, பாட்டு, ஓவியம், நடனம், புத்தகங்கள் இன்னும் தெரிந்து கொள்ள எவ்வளவோ விஷயங்கள்  நம்மை சுற்றி உள்ளது. அதில் ஒன்றையாவது நம் குழந்தைகளுக்கு அறிமுகபடுத்துவோம்.அவர்கள், ஆரம்பம் முதலே நல்ல விஷயங்களில் மனதை செலுத்த நம்மாலான முயற்சியை செய்வோம்..(படிப்பை விட்டால் டிவி அல்லது சினிமா  தான் என்னும் நிலை வருந்ததக்கது..) 


12 comments:

 1. நூற்றுக்கு நூறு நீங்கள் சொல்வது சரி.

  ReplyDelete
 2. //இதுபோன்ற uniform காதலை நியாயபடுத்தும்//இந்த காரணத்தினால் தான் என்னால் பலரும் மெச்சிய காதல் திரை படத்தை பாக்க சகிக்கவில்லை!

  ReplyDelete
 3. Actually children have lot of exposures now Vigna. I don’t believe ,if we don’t watch these movies with them will save them from these kinds of exposure. Instead of that I feel we should watch these stuffs with them and make them to understand the impact and we can even use that as a chance to explain about the parental feelings. When they know the reason , they cooperate even better. They need proper direction. Practically we cannot change the world . Atleast we can prepare our children to face it with right attitude.

  ReplyDelete
  Replies
  1. I truly believe we have lot more things in the world than exposing the children to movies..Since I know how i get disturbed on mind bothering movies I never would try them on my children. Their childhood is at stake here. Anyway it is my personal opinion - that's all..

   Delete
 4. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சினிமா பதின்பருவத்தில் மிக முக்கியமானதாகிவிடுகிறது.அவர்களைத் தேடி வருவது சினிமா.அறிமுகப்படுத்த தேவையே இல்லாதபடிக்கு.வேறு வழியில்லை ஆனால் அவர்களுடன் கலந்துரையாடுவது ரொம்ப நல்ல விஷயம்,தேவையான விஷயம். அது இல்லை எனில் நீங்கள் குறிப்பிட்ட விபரீதங்கள் நிகழ வாய்ப்புண்டு...

  uniform காதலை....- nice words

  ReplyDelete
 5. I am in agreement with the most part. A big loss for our kids is that there is noclear distinction between children movies/ adult movies. And TV always playing the "hero" antics is just repulsive. But இந்த unreal சினிமா காதல் வேண்டாமே... would have been more appropriate title.. Kadhal in the film "MOZHI" is something I want my son to see..
  **The decency to be nice to everyone not just the girl you are crazy for - not confuse sympathy with love - leave the loved one alone if they needed it ** were nicely done without a lot of posturing dialogues.
  Can we really completely shield the? IS that even healthy? Can only arm them with pride in good values and teach them to tell the difference.. bcos "FREE WILL" kicks in you see, after the supposed "childhood"... but certainly "NO" to kids to watch mangathaa or ezham arivu or velayudham & the like anytime...

  ReplyDelete
  Replies
  1. அதற்காகவே # தவறான செயல்களை நியாயபடுத்தும் சினிமாவை புறகணிக்கலாம்# என்று எழுதினேன்..
   சினிமாவே பார்க்க வேண்டாம் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை..அப்படி சொல்வதும் practical ஆகாதேன்பதை அறிவேன்!

   Delete
 6. I agree with you ! Well written

  ReplyDelete
 7. Nice Blog !! I am glad to see your blog you have good humour sense in your writing... the casual way of telling the daily life makes it an very enjoyable read..Keep posting..

  ReplyDelete
 8. ஒரு பெண்ணிடம் காதலிக்கிறேன் என்று அடிக்கடி கூறினால் அவள் எவ்வளவு கஷ்டங்களுக்கு ஆளாவாள் என்பதை அழகாக சொல்லிருக்கீங்க... இதை படிச்சாவது நாலு பசங்க திருந்தின சந்தோஷம் தான்......:)

  ReplyDelete