Tuesday, 21 February 2012

கவிதை கேளுங்கள்..

கொஞ்ச நாளாகவே நண்பர் ஒருவர் facebook ல் கவிதையாக எழுதி தள்ளுகிறார்..காதல் வயபட்டிருப்பாரோ என்றே என் சந்தேகம்..
அதென்னமோ ஆண்கள் மட்டும், காதலிக்க ஆரம்பித்தாலோ இல்லை காதலில் தோல்வியுற்றாலோ கவிதை எழுத கிளம்பிவிடுகிறார்கள். உண்மையில் அப்போது மரம்-மட்டை-மண்புழு கூட கவிதை எழுத தகுதியான பொருளாவது சந்தோஷமே. ஆனால், எனக்கு தெரிந்த வரையில் பெண்கள் அதிகம் கவிதை பக்கமெல்லாம் போவதில்லை..(உடனே  ஔவையார் இல்லையா என்று கேட்காதீர்கள்!)  ஒருவேளை, ' நீயே ஒரு கவிதை தான்!' என்று காதலர் சொல்வதால் திருப்தி அடைகிறார்கள் போலிருக்கிறது..

'ஆடிக்கு பின்
ஆவணி - என்
தாடிக்கு பின் ஒரு
தாவணி'
என்று மடக்கி மடக்கி, கவிதை போல ஒன்றை எழுதுவது முதல், அசத்தலான கவிதைகள்  வரை எழுதும் நண்பர்களை நானறிவேன்..

என் வரையில் கவிதை என்றால் அதற்கு ஒரே இலக்கணம் தான் - மனதில் நிற்ககூடிய, ஒருமுறையாவது உச்சரிக்க தூண்டும் வரிகள். மேலே சொன்ன அசட்டு கவிதைக்கு கூட அது பொருந்தும்..
சிறு வயது முதல் பாரதியை பிடித்து போனதற்கு அதுவும் ஒரு காரணம். செய்யுளில் மற்ற பகுதிகள் எல்லாம் கடினமாய் இருக்க, புது கவிதைகள் பகுதியில் வரும் பாரதியார் கவிதைகளுக்கு ஒருபோதும்  'கோனார் நோட்ஸ்' தேவை படவில்லை..

கவிஞர்கள் அறிவுமதி, மு.மேத்தா, தபு சங்கர் என பலரின் நல்ல படைப்புகள் விகடன் மூலம் அறிமுகபடுத்த பட்டிருக்கிறேன். ஆனாலும் திரைப்பட பாடலாசிரியர்கள் மேல் எப்போதும் ஒரு ஆச்சர்யம் கலந்த ஈர்ப்பு எனக்குண்டு. என்னையெல்லாம் ஒரு காதலை அல்லது இயற்கையை  வர்ணித்து எழுதசொன்னால் - ஒரு பத்து வரி எழுத முடிந்தால் பெரிய விஷயம். திரு.வைரமுத்து போன்றவர்கள் தினுசு தினுசாக நூற்று கணக்கான வரிகளை கவிதை நயத்தோடு எழுதும் போது பிரமிப்பாக இருக்கிறது..
ஆண் - 'உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது' என்று சொல்ல; பெண் - 'இது கம்பன் பாடாத சிந்தனை - உந்தன் காதோடு யார் சொன்னது??' என்று குறும்பாக பாடுவதாக எழுதி, கேட்கும் ஒவ்வொரு முறையும் புன்னகைக்க வைக்கிறார்..

இன்னும், கவிஞர்கள் கண்ணதாசன்,வைரமுத்து, ந.முத்துக்குமார், தாமரை ஆகியோரின் பல பாடல் வரிகள் நம்முள் ஒரு உணர்ச்சி கடத்தலே நிகழ்த்துகின்றன. உண்மையில் இவர்களின் கவிதையில் பாடலின் அழகு மட்டுமில்லாமல், ஆயுசும் கூடுவதாக தோன்றுகிறது..

அதேபோல் சோகபாடல்களில் டி.ஆரின் இந்த பாடலே எனக்கு பிடித்தது..
இது குழந்தை பாடும் தாலாட்டு
இரவு நேர பூபாளம்
மேற்கில் தோன்றும் உதயம்
நதி இல்லாத ஓடம்
...
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்   
வெறும் நாரில்  கை  கொண்டு பூ மாலை தொடுகிறேன்  
சிறகிழந்த  பறவை  ஒன்றை  வானத்தில்  பார்கிறேன்
...
நடைமறந்த கால்கள் தன்னில் தடையத்தை பார்கிறேன் 
வடமிழந்த தேரினை நானும் நாள்தோறும் இழுக்கிறேன்
...
விருப்பமில்லா பெண்ணை எண்ணி நாள்தோறும் தவிக்கிறேன்..

கொடுக்கப்பட்ட மெட்டுக்குள், சந்தம் கெடாமல், ஆணாகவும்-பெண்ணாகவும் மாறி மாறி கற்பனை செய்து பாடல் எழுதுவது ஒரு சவாலே! அடுத்த முறை sunmusic ல் பாடல் ஒளிபரப்பும் போது, இடுப்பை வெட்டி வெட்டி இழுக்கும் பெண்ணை மறந்து, வரிகளை கவனித்து பாருங்கள் - இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

பின்குறிப்பு - இப்படி ஓரங்கசீப்பாக இருக்கிறோமே, நமக்கும்  கவிதை வராதா என்று ஏங்கி எழுதி பார்த்தேன்..ம்ம்ஹூம்..'கல்' தான் வந்தது..


5 comments:

 1. My favorite is the lyrics are from Kadhal Oviyam

  பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்..
  Dont miss the important ஹீரோ heroine சர்ச்சை about interpreting this -அவரவர் கோணங்களில் in இரும்பு குதிரைகள் by பாலகுமாரன்.

  I think I am partial to 80s a little..
  நேற்று இல்லாத மாற்றம் என்னது..
  இலக்கணம் மாறுதோ...
  கம்பன் ஏமாந்தான்.,.
  ஜூனியர் ஜூனியர்..
  காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி..

  Actually, I'd like to know some from the latest...

  I want to refer this here for tamil filmsong lovers..
  http://tamil-paadal-varigal.blogspot.com/2009/05/n.html

  ReplyDelete
  Replies
  1. "நான் குழந்தை என்றே நினைத்திருந்தேன் - உன்
   பார்வையில் என் வயதறிந்தேன்" --நா.முத்துக்குமார், இந்த இரண்டு வரிகளில் பெண்ணின் சகல உணர்சிகளையும் கொண்டுவந்துவிட்டதாக தோன்றுகிறது..
   தாமரை எழுதிய --
   "உலகத்தின் கடைசி நாள் -
   இன்று தானோ என்பதுபோல்
   பேசி பேசி தீர்த்த பின்னும்
   எதோ ஒன்று குறையுதே..."
   இன்னும் மதன் கார்கியின்
   "ஓராயிரம் இரவில் சேர்த்ததை
   ஓரீர் நொடி இரவல் கேட்கிறாய்!" (பெண் குரல்)

   2012 லும் நல்லா கவிஞர்களுக்கு குறைவில்லை, வித்யா..

   Delete
 2. நண்பர் சொன்னது..
  கவிதை, சினிமா பாடல் என்று டாபிக் வந்துவிட்டதால் நண்பர் ஸ்ரீபதி பத்மநாபா எழுதிய இந்த சுவாரஸ்யமான பதிவுகளை படித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக ’வரிப்புலிகள்’ கட்டுரையை.

  http://sreepathypadhman.blogspot.in/2007/11/blog-post.html
  http://sreepathypadhman.blogspot.in/2008/12/6.html
  http://sreepathypadhman.blogspot.in/2008/12/8.html

  ReplyDelete
 3. Very true... சின்ன வயசுல நான் ரொம்ப திட்டியவர் Mr .திருவள்ளுவர் தான். இப்போ கடமையா இல்லாம விரும்பி படிக்கும் போது திருவள்ளுவர் சொன்ன கருத்தை விட சொன்ன விதத்தை ரசிக்க முடிகிறது ....

  ReplyDelete
 4. இது குழந்தை பாடும் தாலாட்டு
  இரவு நேர பூபாளம்
  மேற்கில் தோன்றும் உதயம்
  நதி இல்லாத ஓடம்

  - one of my favorite songs... i like those contradictory words.

  ReplyDelete