Thursday, 1 March 2012

மறந்து போன எல்லா நண்பர்களுக்காகவும்...

திருமணம் ஒரு விதத்தில் உறவுகளை அதிகபடுத்தியும், நட்பை குறைத்தும் விடுகிறது. முன்னது சந்தோஷம் தருவதை போலவே பின்னது வலியையும் தருகிறது..

Facebook என்று ஒன்று இருப்பதால், தலைவலியோ - தீபாவளியோ, ஒரு வரி எழுதிவிட்டு இத்தனை friends டச்ல் இருப்பதாக சொல்லி கொள்ள முடிகிறது..அவர்கள் upload செய்யும் போடோக்கள் மூலம், முகம் மட்டும் மறக்காமல் பார்த்து கொள்ள முடிகிறது.

நேரில் நான் பார்க்கும் நண்பர்களனைவரும் என் பெண்ணின் தோழர்களின் அம்மாக்களே ! அவர்களிடம்,' cycle test என்னிக்கி ஆரம்பிகிறாங்க'; 'ஹிந்திக்கு என்ன syllabus ?' என்று ஒரே மாதிரி பேசுவது அலுப்பு தட்டுகிறது..ஆனந்த விகடன் ஜோக்கில் வருவது போல, compound சுவரின் அடுத்த பக்கம் இருக்கும் பெண்மணியுடன் வம்பளப்பது எல்லாம் இப்போது கிடையவே கிடையாது. அம்மணிக்கு திருமதி செல்வமோ - தங்கமோ வந்து காத்திருக்கிறார்கள்..


நகமும் சதையுமாய் கல்லூரி நாட்களில் இருந்த தோழி, அமெரிக்காவிலிருந்து 'hi Vigna how are you?' என்று மெயில் தட்டுகிறாள். சரிதான் என்று நிறைய வரிகளில் பதிலும், குழந்தைகள் போட்டோவை attach செய்தும் காத்திருந்தால், அவள் மேனேஜர் ஊரில் இருந்து திரும்பி விட்டாரோ என்னமோ, என்னை மறந்து போகிறாள்.


இங்கிருக்கும் தோழிக்கு தொலைபேசினால் மறுமுனையில், 'லொக்', 'லொக்' என்று சத்தம் கேட்கிறது. அவள் தயக்கத்துடன், என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்கிறாள். 'சரி, நான் போனை வச்சுடறேன்' என்றால், 'இரு இரு அவங்களுக்கு மருந்து தந்து விட்டு வருகிறேன்' என்கிறாள். மீண்டும் வந்து 'அவங்களுக்கு horlics வேணுமாம்!' என்று இழுக்க நானே அவளை சங்கட படுத்தாமல் வைத்து விடுகிறேன். மீண்டும் அழைப்பது அவளுக்கு தொல்லை என்று மனம் சொல்கிறது..


இம்முறை என்னை வெளிநாட்டிலிருக்கும் என் நண்பன் அழைக்கிறான். என் இரண்டு வயது குழந்தை potty போய்கொண்டு இருக்கிறது. அதை சொல்லவும் முடியாமல், பேச்சில் கவனமும் இல்லாமல் தவிக்கிறேன். ஒருவழியாக, 'பிறகு பேசுவோம்' என்று முடிக்கிறேன். அந்த 'பிறகு' ஒருபோதும் உடனே வருவதில்லை என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்..


அப்படி என்னதான் பேசவேண்டும் என்கிறீர்களா? Ankle length anaarkali பிடிக்கவில்லை என்று பேசலாம்; நித்ய ஸ்ரீயா - சுதா ரகுநாதனா யார் பெஸ்ட்னு தீர்மானத்துக்கு வரலாம்; ஏதாவது சினிமாகாரரை பற்றி புறம் கூறலாம்;  - இப்படி எதோ ஒண்ணு! விஷயம் முக்கியமில்லையே?
தெரு நாய் குரைத்து அடங்கும் இரவில் களைப்புடன் திரும்பும் கணவருக்கு அனார்கலியும்  நித்ய ஸ்ரீயும் தந்து இம்சிப்பதில் நியாமில்லை. அவருக்கு தேவை - சூடான சாப்பாடும், கொஞ்சம் NDTV யும், நிறைய தூக்கமும் தான் என்பதில் தெளிவாக இருக்கிறேன்..

மீண்டுமொருமுறை --
- என் நண்பனின் மொக்கை கவிதையை, சிரிக்காமல் கேட்டு 'சூப்பர் ரா!' என்று சொல்ல வேண்டும்..
- கடிகாரத்தை எங்களோடு சேர்த்து கொள்ளாமல், நானும் என் தோழியும் ஒரு சுடிதார் வாங்க, ஓராயிரம் கடை ஏறி இறங்க வேண்டும்..
- நண்பர்களின் அம்மாக்கள், எங்களுக்கும் 'அம்மா' ஆகவேண்டும். சாஸ்வதமாக போய் 'ஒரு cofee தாங்கனு' கேட்டு வாங்கணும் .
- 'நான் ரொம்ப ஹர்ட் ஆயிட்டேன்' என்று இரவு முழுதும் திரும்ப திரும்ப சொல்லும் ரூமேட்டிடம் 'இது ஒரு passing clouds , நாளை தானே வந்து பேசுவான் பாரேன்!' என்று தேற்ற வேண்டும்..
- நண்பர்களோடு மொட்டை மாடியில் அமர்ந்து புதிதாய் பார்த்த படம் உருப்படாமல் போனதன் காரணத்தை அலச வேண்டும்..
- கடற்கரையின் அந்தி சாயும் வேளையில், அனல் குறைந்த மணலில் அமர்ந்து நண்பர்களோடு இன்னதென்று நினைவு கொள்ள முடியாத விஷயங்கள் பேச வேண்டும்..

இன்னும் எவ்வளவோ நிராசைகள்..
ஆனால், இந்த பதிவு ஒரு புலம்பல் அல்ல, ஆதங்கம் மட்டுமே. ஏனெனில் இழந்ததை போலவே நான் பெற்றதும் அதிகம்..

இதை படிக்கும் உங்களுக்கு ஒரு நட்பு வட்டம் இருக்குமானால், அதை ஆராதியுங்கள்..ஏனெனில் எல்லோரும் உங்களை போல அதிர்ஷ்டசாலிகள் அல்ல..


10 comments:

 1. அருமையான பதிவு விக்னா.

  இந்த எலெக்ட்ரானிக் யுகத்தில் உலகத்தில் நேரடியாய் பேசுவது குறைந்து டைப்படித்து அனுப்புவது அதிகரித்திருக்கிறது. ஒரு வித ஆயாசமும், தப்பித்தலும் காரணமாக இருக்கலாம்.

  ReplyDelete
 2. krithika kalyan3 March 2012 at 00:07

  Really enjoyed every word Vigna.. Very true.. At least our generation is blessed with Internet and telephone.. Only our interest decides our relationship with our friends. But true, that interest is reducing drastically after marriage ..... Vigna, you brought a beautiful common platform to everyone from our family and also to our friends. I am very happy to see Mali appa and VS peripa are regular readers of your blog. I hope and wish you to continue this .....
  Krithika.

  ReplyDelete
 3. Hi Vigna,
  உனக்கும் தபால் பெட்டிக்கும் நிறைய பந்தம் இருப்பதால் இன்னும் சில.... பேனாவால் ஒரு கடிதம் எழுத வேண்டும். தினமும் தபால்காரரை எதிர்பார்த்து காத்து இருக்க வேண்டும்.. இப்படி எத்தனையோ.....

  எதிர்பார்ப்புகள் இருந்தால் தானே ஏமாற்றம். எதற்கு எதிர்பார்க்கணும்? கால மாற்றத்தை ஏன் நம்மால் ஏற்று கொள்ள முடியவில்லை?

  ReplyDelete
  Replies
  1. உன் கிண்டல் புரிகிறது..
   விஷயம் எதிர்பார்ப்பு - ஏமாற்றம் பற்றியதல்ல..காலம் நட்பை முக்கியமில்லாமல் செய்து விடுகிறது என்பதே..மேலும் என் "வேண்டும்" களின் பின்னணியில் இருப்பது நண்பர்கள் எனக்கு தந்த நினைவுகளின் தொகுப்பே..

   ஒரு பொன் மாலை பொழுதை நண்பர்களோடு செலவிட முடிந்தால், அதை தவற விடாதீர்கள். Facebook ஒ, டிவி யோ தராத இனிமையான நேரம் அது - இதுவே என் பதிவின் சாராம்சம்..

   Delete
  2. ஒரு பொன் மாலை பொழுதை நண்பர்களோடு செலவிட முடிந்தால், அதை தவற விடாதீர்கள். Facebook ஒ, டிவி யோ தராத இனிமையான நேரம் அது - இதுவே என் பதிவின் சாராம்சம்..

   - superb. hats off to your thoughts.

   Delete
 4. One more item to the wishlist....
  Ignore the phone and email. Thampum thavarumana thanglishil nanbargalukku (including parents and dear large family) neenda kaditham ezhuthi, atharkana bathil vara kaathirukka vendum.

  ReplyDelete
 5. உண்மைதான். எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாமே என்ற வசதியே எப்போதும் ஆத்மார்த்தமாக தொடர்பு கொள்ளமுடியாத சூழ்நிலையை உருவாக்குகிறது. நான் சென்னையில் குடியிருக்காதபோது, சென்னை வரும்போதெல்லாம் சொந்தக்காரர்களின் வீடுகளுக்குப் போய்வருவதுண்டு.சென்னையில் குடியேறியதும் இது சுத்தமாய் நின்று போய்விட்டது. 'பேணாத உறவு ' முறிந்த உறவுக்கு சமம்.

  குறுகி குறுகி தனிநபர் சுதந்திரம், தனிநபர் சந்தோஷம், தனிநபர் வருத்தங்கள் என்ற சின்ன வட்டத்துக்குள் வந்த பின்பு இனி என்ன என்ற கேள்விக்குள் மாட்டிக்கொண்ட பின்புதான் நாம் 'சிக்கிக்கொண்ட வலை' பற்றி பிரக்ஞை வரும்.

  ReplyDelete
 6. ஆனால், இந்த பதிவு ஒரு புலம்பல் அல்ல, ஆதங்கம் மட்டுமே. ஏனெனில் இழந்ததை போலவே நான் பெற்றதும் அதிகம். - nice one.

  So agree with the post. But you have done something actually wonderful to both embrace the changes and stepped up by becoming chatty with a lot of "little somethings" that matter to you, via this blog.Where there is a will...

  ReplyDelete
 7. ///என் நண்பனின் மொக்கை கவிதையை, சிரிக்காமல் கேட்டு 'சூப்பர் ரா!' என்று சொல்ல வேண்டும்.////
  முன்னமே நினைச்சன்! என்னடா நம்ம ப்ளாக்ல எல்லாம் கமெண்ட் வருதேன்னு! இப்ப புரிஞ்சிடுச்சு! :(((((

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் கொஞ்சம் லேட் தான் நீங்க...

   Delete