Friday, 13 April 2012

அவ்வையார் விருது

இந்த வருடம் முதல் 'அவ்வையார் விருது' அளிக்க போவதாக தமிழக அரசு அறிவித்ததும், அதை வாங்க போகும் பெண்மணியின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைத்து சிரித்து கொண்டேன்..இதை சொன்ன போது இலக்கிய ஆர்வம் உள்ள என் நண்பர் கோபித்துக்கொண்டார்..உண்மையில், அவ்வையாரே தமிழ் உலகம் கண்டுகொண்ட முதல் அறிவாளி பெண். இருந்தாலும், இப்போது ஒருவரை 'அவ்வையார்' என்று அழைப்பது நடைமுறையில் மிகுந்த வயதானவர் அல்லது அதிகம் அட்வைஸ் செய்பவர் என்ற பொருளில் இருப்பதால் விருது வாங்குபவருக்கு வேடிக்கையாக இருக்கும் என்று தோன்றியது. என் நண்பருக்கு புரியாத இன்னொரு விஷயம் என்னவென்றால் எந்த பெண்ணுமே பிறர், தன் வயதை விட கொஞ்சமேனும் குறைத்து எடைபோடுவத்தையே விரும்புவாள்..

உதாரணமாக என் அம்மாவோடு புடவை கடைக்கு போனால், 'அந்த டிசைன் வேண்டாம்! அது வயசானவங்க கட்றது' என்பார். (எங்க அம்மாவை 'பாட்டி' என்றழைக்கும் ரெண்டு குழந்தைகள் வீட்டிலிருக்கின்றன) மனதளவில் என் அம்மாவை போல இளமையாக இருக்கும் பெண்கள் தான் பெரும்பாலானோர் என்பது என் நம்பிக்கை.  

இவ்ளோ என்? 'உங்க ப்ளாக் சூப்பர்!' ,' உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் நல்லாயிருக்கு..' - இப்படி அப்பப்போ எனக்கு ஏதாவது compliments கிடைக்கறதுண்டு. ஆனாலும், 'you don't look like mom of two' ன்னு சொல்றவங்கள மட்டும் instant ஆ பிடிச்சு போயிடுது!!

ஒரு வில்லத்தனம் கேளுங்க - எனக்கும், என் எதிர் வீட்டிலிருக்கும் என்னை விட ஒன்றிரண்டு வயது குறைந்த பையனுக்கும் 'தீராத பகை' ஒன்றிருக்கிறது. அவன் முதல்முதலில் என் வீட்டிற்கு வந்த கடிதத்தை கொண்டு வந்து தந்த போது கூரியர் பையன்னு நினைத்து 'எதில கையெழுத்து போடணும்?'ன்னு கேட்டு தொலைச்சேன். அதுக்காக என்னை 'ஆன்ட்டி'ன்னு கூப்பிட்டு உயிரை வாங்கறான். அவன், அன்னிக்கி செல்வராகவன் பட கதாநாயகி போல மூஞ்சிய உர்ர்ன்னு வச்சிருந்தது என் தப்பா சொல்லுங்க??? (அப்போ கத்துகிட்ட பாடம் என்னன்னா, யார்கிட்ட பேச ஆரம்பிச்சாலும் முதல் மொழி - புன்னகை தான்)

உங்களுக்கும் சொல்லி வைக்கறேன் - எந்த பெண்ணையாவது இம்ப்ரெஸ் பண்ணனும்ன்னு நினைச்சா, ' உங்கள பார்த்தா -- வயசு போலவே தெரியலையே? ரொம்பவே young ஆ இருக்கீங்க!' ன்னு ஒரு தூஸ்ராவ தூக்கி போடுங்க.அவங்க மட்டும்  க்ளீன் போல்ட் ஆகலன்னா என் பேர அருக்கானின்னு மாத்திக்கறேன்..

திரும்பவும் விருதுக்கே வர்றேன். என்னை பொறுத்த வரையில் 'அரசு விருது'ங்கறது, ஆட்சியில் இருப்போர் தனக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு கொடுக்கற சற்றே 'காஸ்ட்லி ட்ரீட்' !! அதுக்கு மேல அத பத்தி யோசிக்க கூடாது.. 
----------
அவ்வையார்ல ஆரம்பிச்சத,அவ்வையார்லே முடிக்கறேன்.  எனக்கு பிடிச்ச அவரோட வரிகள்-

 'எது அரியது?'  என்ற முருகனின் கேள்விக்கு அவ்வையின் பதில் இதோ -
'அரிதரிது மானிடர் ஆதல் அரிது; மானிடராயினும் கூன்-குருடு-செவிடு-பேடு நீங்கிப் பிறத்தல் அரிது; ஞானமும் கல்வியும்நயத்தலரிது'

என் நண்பர் தனக்கு பிடித்ததாக சொன்னது - 
                 ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
                 இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
                 என்னோவு அறியாய் இடும்பைகூர் - என்வயிறே 
                 உன்னோடு வாழ்தல் அறிது

( உணவு அதிகம் கிடைக்கும் அன்று இருவயிறுக்கும், கிடைக்காத அன்று ஒன்றுமில்லாமலும் இருக்க மறுக்கும் வயிறே - உன்னோடு ரொம்ப கஷ்டம்! - பசியோடு அவர் அலைந்து திரிகையில் இத்தனை அருமையாய் எழுதியிருக்கிறார்)

 முதுமைய விரும்பி ஏற்றுக்கொண்ட முதலும்-கடைசியுமான பெண் அவ்வை தான்!

அப்புறம் கடைசியா ஒரு விஷயம் - மேலே கோடிட்ட இடங்கள (--) சரியான நம்பர் கொண்டு நிரப்புங்க. இல்லைன்னா விளைவுகளுக்கு mars and venus company பொறுப்பேற்காது!!!8 comments:

 1. கடிதம் கொடுக்கும் பசங்க எல்லாம் கூரியர் பாய்ஸ்?

  அவ்வையார் விருது உம்மகே :)

  ReplyDelete
 2. //கடிதம் கொடுக்கும் பசங்க எல்லாம் கூரியர் பாய்ஸ்? //

  இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே??

  ReplyDelete
 3. வலை வந்து வாழ்த்தினீ்ர்! நன்றி சகோதரி!வயதானதாக பெண்கள் தங்களைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதை தெளிவு படித்துள்ளீர்! அவ்வையார் விருது தமிழ்ப் புலமைக்குத் தரவேண்டியது! ஆனால்...!? சா இராமாநுசம்

  ReplyDelete
 4. விருது இப்போதெல்லாம் வெறும் கேலி பொருளாகிவிட்டது, இல்லையா ஐயா?

  அப்புறம் 'சகோதரி??' :((

  ReplyDelete
 5. வயது அணுக்கும் பெண்ணுக்கும் பொதுவே . நீ பெண்ணிடம் மட்டும் இல்லை வயதான ஆணிடம் உங்கள் வயதை நம்ப முடியவில்லை , சின்ன பையன் மாதிரி இருகிங்கன்னு சொன்னால் பெண்ணை விட சந்தோஷம் படுவார்.

  Krithika.

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி..முயற்சி பண்ணினதில்ல..

   Delete
 6. உளவியல் உண்மை // 'you don't look like mom of two' ன்னு சொல்றவங்கள மட்டும் instant ஆ பிடிச்சு போயிடுது!!//
  ஹி ஹி நைஸ் ஹிண்ட் // ' உங்கள பார்த்தா -- வயசு போலவே தெரியலையே? ரொம்பவே young ஆ இருக்கீங்க!'//

  ReplyDelete
 7. என்னை பொறுத்தவரை வயது மனதால் கணிக்கபடுகிறது .உடலின் முதுமையால் அல்ல

  ReplyDelete