Friday, 29 June 2012

த்ரிஷா, கட்ரினா, ஐஸ்வர்யா - யாருடையது பெஸ்ட்??

அன்பான விளம்பரதாரர்களுக்கு,

ஒரு அப்பாவி குடும்ப தலைவி எழுதிக்கொள்வது..உங்கள் விளம்பரங்கள் அனைத்தும் தினமும் பார்க்கிறேன் (பார்க்க வைக்கிறீர்கள்). இவற்றை அப்படியே நம்ப வேண்டுமென்று தான் நினைக்கிறேன். ஆனால், என்னை சுற்றியுள்ளவர்கள் தான் நம்பவிடாமல் சதி செய்கிறார்கள்.

சில விளம்பரங்களும், அவை என்னை படுத்தும் பாடும் கேளுங்கள் :

முதலில் AXE DEODORANT விளம்பரங்கள்- இவை சொல்லவருவது என்னவென்றால், DEODORANT ஐ உடல் முழுவதும், நகராட்சியில் கொசு மருந்து அடிப்பது போல அடித்து கொண்டீர்கள் என்றால், அழகழகான சைஸ் ஜீரோ பெண்கள் நாலா திசையிலிருந்தும்(சமயத்தில் கூரையை பிய்த்து கொண்டும்) உங்களை தேடி வருவார்கள். சுமார் நூத்தி முப்பது ரூவாய் ஐம்பது பைசாவில் முடிந்து விடக்கூடிய சுலபமான வழி இது..!! இதை நம்பாமல் என் நண்பன் தன் ஒரே ஒரு காதலியின் மனதை கரைக்க, மாங்கு மாங்கென்று கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்..(ஒரே சமயத்தில் வரும் இத்தனை பெண்களையும் சமாளிப்பது எப்படி என்று டப்பியில் சின்ன எழுத்தில் போட்டிருப்பார்களா தெரியவில்லை..)


ஒரு லிக்விட் சோப்பு விளம்பரம். ஒரே ஒரு ஸ்பூன் சோப்பு கொண்டு ஒரு அம்மணி தன் புடவை துளி கூட கசங்காமல் கூடை பாத்திரத்தை தேய்க்கிறார். நானும் அது போல தந்தால், என் வீட்டில் வேலை செய்பவர்,
"ஐய..தம்மாத்தூண்டு தந்தா, அயுக்கு எப்டி போவும்??நா தா போய்டுவன், உ வேலயே வேனாமினு!!!.." என்று பயம் காட்டுகிறார்.

இதே கதை தான் துணிகளுக்கும்..'கறை நல்லது' சோப்பு கம்பெனிக்கு தான். அது போல துணிய ரெண்டு நாள் துவைக்க போட்டீங்கன்னா, அடுத்த ஜென்மத்துல கூட உங்களுக்கு வேலைக்கு ஆள் கிடைக்காதுங்கறது உறுதி.


இது கொஞ்சம் வேற மாதிரி - விஜய் டிவியில் தினமும் பதினோரு மணி வாக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகள் கருப்பு கண்ணாடி அணிந்து வந்து, கூடுவாஞ்சேரி அருகில் உள்ள பிளாட், சென்னை தான் என்று சொல்லி கூவி கூவி விற்கிறார்கள்.(அதோ தெரியுது பாருங்க ரயில்வே ஸ்டேஷன், NH 45, அந்த நிலா --இது எல்லாமே இந்த பிளாட்லேருந்து நடக்கற தூரம் தான்!) இந்த ஆட்டோ டிரைவர்களுக்கு இது புரிந்தால் தானே?? தாம்பரம் தாண்டினாலே சொத்தில் ஒரு பங்கு கேட்கிறார்கள்..ஒரு நாள், 'நீயா? நானா?'வில் இவர்களை மோத விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்பது என் ரொம்ப நாள் ஆசை.சாப்பாட்டுக்கு வருவோம் - என் வீட்டு டிவியை எப்போது உயிர்பித்தாலும் வரும் போகோ/சுட்டி டிவி/ஆதித்யா சானல்களில் 15 நிமிடத்துக்கு ஒரு முறை வந்து, நூடுல்ஸ், சாக்கலேட், பிஸ்கட், சிப்ஸ் வகையறாக்களில் வைட்டமின் A முதல் Z  வரை இருப்பதாக விளம்பரங்கள் கற்பூரம் ஏற்றாமல் சத்தியம் செய்கின்றன..ஆஹா, இதை நம்பினால் தான் எவ்வளவு சவுகர்யம்??? ஆனால் ஸ்கூல் திறந்தவுடன் டைரி என்று ஒன்றை கொடுத்து, மேற்படி வகையறாக்களை "junk food" என பெயரிட்டு இவற்றை கொண்டுவர கூடாதென்று அச்சடித்து தருகிறார்கள்..

சோப்பு மற்றும் இன்னபிற அழகு சாமான்கள் :

இருபது வயது மதிக்க தக்க நடிகைகள், 2 நாள் முன் மார்கெட்டுக்கு வந்த சோப்பே தன் அழகுக்கு காரணம் என்று கட்டியம் கூறுகிறார்கள்.
சரி இவர்கள் சொல்படி நடப்போம் என்றால், எனக்கு த்ரிஷாவையும், என் கணவருக்கு கட்ரினாவையும், மகளுக்கு ஐஸ்வர்யாவையும், மாமியாருக்கு பயத்தமாவையும் பிடித்திருக்கிறது..
நாங்கள் எதை வாங்குவதென்று முடிவு கட்டுவதற்க்குள், ஒன்று அந்த நடிகை தன் அழகுக்கான காரணத்தை வேறு சோப்பு அல்லது கிரீம் என்று மாற்றிக்கொள்கிறார். அல்லது சோப்பு தனக்கு வேறு அழகியை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது..


இது இப்படியென்றால், "உங்க டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?" என்று ஒரு நடிகை தினமும் வந்து மிரட்டுகிறார். என் பேஸ்ட்டில் இருப்பது உப்பா, சர்க்கரையா...ன்னு நான் கண்டுபிடிப்பதற்குள், எதுக்காகவும் facebook பக்கமே வராத தோழி, நான் உபயோகிக்கும் டூத் பேஸ்ட்டில் இருப்பது 'நிகோடின்' என்று ஒரு செய்தியை போட்டு, பிடித்து கொண்டிருந்த கடைசி ஆணியையும் பிடுங்கிவிட்டு மாயமாகிறாள்..

ஸ்ஸ்ஸ்ஸ்....முடியலங்க!! விளம்பரம் என்றாலே பொய் தான் என உறுதியாக நம்பும் நேற்றைய தலைமுறைக்கும் , எல்லா விளம்பரங்களையும் கண்டு ஏமாறும் அடுத்த தலைமுறைக்கும் நடுவில் நாங்கள் திண்டாடுவது உங்களுக்கு தெரியுமா?

தெரிந்தால் மீள்வதற்கு வழியும் சொல்லுங்கள்.

இந்த தேசத்தின் எல்லா தங்கமணிகள் சார்பாகவும்,
விக்னா

பி.கு: பதிவோட தலைப்பு சும்மா போங்கு'க்காக.. எவ்ளோ தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதினாலும் கம்பெனி பக்கம் யாரும் வர்றதில்ல..இப்டி தலைப்பு வச்சா வர்றாங்கலான்னு பார்த்தேன். இதோ நீங்க வந்துட்டீங்க.  :-)


44 comments:

 1. ////சரி இவர்கள் சொல்படி நடப்போம் என்றால், எனக்கு த்ரிஷாவையும், என் கணவருக்கு கட்ரினாவையும், மகளுக்கு ஐஸ்வர்யாவையும், மாமியாருக்கு பயத்தமாவையும் பிடித்திருக்கிறது..
  நாங்கள் எதை வாங்குவதென்று முடிவு கட்டுவதற்க்குள், ஒன்று அந்த நடிகை தன் அழகுக்கான காரணத்தை வேறு சோப்பு அல்லது கிரீம் என்று மாற்றிக்கொள்கிறார். அல்லது சோப்பு தனக்கு வேறு அழகியை தேர்ந்தெடுத்து கொள்கிறது..///

  Haha! எல்லா விளம்பரங்களிலும் இதில் “மைக்ரோக்ரேன்யூல்கள்” அடங்கியுள்ளது, அதில் அடவான்ஸ்டு ஜெர்ம் கண்ட்ரோல் ஸிஸ்டம்” அல்லது, ”ஜெர்மன் டாக்டர்கள் பரிந்துரைக்கும்” இப்படி எதையாவது சொல்லி ஜல்லியடிக்கிறார்கள். பார்த்துத் தொலைத்து வாங்கித் தொலைக்கவேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்..அதிலும் இந்த 'GERM FREE/ BACTERIA FREE' வாக்கியம் இரு பொருள் தருவதால் கொஞ்சம் ஹாஸ்யமாகவே இருக்கிறது.

   Delete
  2. ஆமாங்க. அதுக்கெல்லாம் அவங்க சார்ஜ் பண்றதில்ல. அதெல்லாம் உங்களுக்கு ஃப்ரீயாவே கிடைக்கும்னா பாருங்களேன் ?

   Delete
  3. 'GERM FREE/ BACTERIA FREE' இதுக்கு காசு ஏதும் குடுக்கத்தேவை இல்லைங்க. இதெல்லாம் பைசா செலவில்லாம ஃப்ரீ தான்.

   Delete
 2. Meera Srikanth29 June 2012 at 12:19

  we need to see all these advertisement ( we have no choice) o/w we cannot survive first thing. our next door will comment" u didnt watch T.V. or what " (still we r using the old product). imm. we feel bad and go to shop and buy that thing (we dont know whether its useful for us or not). so good or bad, making advertising will give more effect... "good work vigna..."

  ReplyDelete
  Replies
  1. We get influenced ( and also create) peer-pressure. and, that's the marketing idea too.I agree it is a tough phase for new-gen parents like us..

   Thanks for reading :)

   Delete
 3. .."எங்கள் அமெரிக்க லேபில் டெஸ்ட் செய்யப்பட்டது" ன்னு ஒரு விளம்பரத்தில் சொன்னாங்க.. என்ன கொடுமைடா இது!

  ps: விளம்பரம் பொய்னு நம்பர நான் இப்ப தலைப்பும் பொய்னு நம்ப ஆரம்பிச்சுட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. Bandhu சார், உங்க கோவமும், ஏமாற்றமும் எனக்கு புரியுது..என் ஜிமெயில்க்கு உங்க அட்ரெஸ அனுப்பிவிடுங்க..உங்களுக்கு லேட்டஸ்ட் குமுதம் அனுப்பி பரிகாரம் தேடிக்கறேன். (யார்கண்டது? மேற்படி 'யார் பெஸ்ட்' கேள்விக்கு அரசு பதில்ல உண்மையான விடை கிடைக்கக்கூடும்! ;))

   Delete
  2. பரவாயில்லை விக்னா.. டேக் இட் ஈசி.. எமாற்றவங்கள பத்தி சொல்றதுல கூடவா... அப்படின்னு ஒரு நிமிஷம் நினச்சேன்.. அவ்வளவுதான்..

   Delete
  3. :-) சொன்னா நம்ப மாட்டீங்க, இப்டி ஒரு தலைப்பு வச்சதால நம்ம கம்பெனி பக்கம் கூட்டம் அலைமோதுது..இது கலிகாலம் இல்ல, சார்..விளம்பரகாலம்.

   Delete
 4. ஆஹா....... அருமை! சோப்போட நிறுத்திட்டீங்களே.... தலைமுடி அழகுக்கு காமிக்கும் ஷாம்பூ??????

  இதுலே சொல்லிவச்ச மாதிரி ஒரு கையால் மேல்பக்கத்தைப் பிடிச்சுக்கிட்டு அடுத்த கையால் முடிக்கற்றையை ஒரு இழு இழுத்துக் காமிப்பாங்க!!!! கையோடு வந்துருச்சுன்னா.....
  நோ ஒர்ரீஸ் எடிட்டிங்கில் சரி பண்ணிடலாம்:-)))))

  இந்தியாவில் ஒரு ரெண்டரை வருசம் இருந்துட்டு டிவி விளம்பரங்களால் நொந்து போயிட்டேன். ஒரு தடவைச் சொன்னால் போதாதுன்னு உடனுக்குடன் திருப்பித்திருப்பி காமிச்சு................. ஐயோ:(

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசி.. :)

   கூந்தல் காற்றில் பறக்கும்ன்னு சொல்றாங்க..உபயோகிச்சு பார்த்தா உண்மைலே பறந்து தான் போயிட்டிருக்கு, நம்மள விட்டு..

   Delete
 5. naan kuda title pathi edhuvathu varum edharparthu yemmatram !!

  பி.கு: பதிவோட தலைப்பு சும்மா போங்கு'க்காக.. எவ்ளோ தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதினாலும் கம்பெனி பக்கம் யாரும் வர்றதில்ல..இப்டி தலைப்பு வச்சா வர்றாங்கலான்னு பார்த்தேன். இதோ நீங்க வந்துட்டீங்க. :-)

  naanum edhil onnu !!!

  ReplyDelete
  Replies
  1. சரி ஜானு - உனக்காக இதோ டைட்டில் ஜஸ்டிபிகேஷன் - 'த்ரிஷா, கத்ரீனா, ஐஸ்வர்யா - இவங்க மூணு பேருமே மேக்கப் போட்டாதான் பெஸ்ட்..இது எதுவுமே இல்லாம அழகா இருக்கற நாம தான சூப்பர் பெஸ்ட்!!'

   ஹிஹி..இப்டி ஏதாவது நாமே சொன்னாதான் ஆச்சு.

   Delete
 6. ஒன்று சொல்லட்டுமா ? இந்தியாவில் இருக்கும் விளம்பரங்கள் தான் கொஞ்சம் ஓவராகப் போய்க் கொண்டிருக்கின்றது என நினைக்கின்றேன் ( அமெரிக்கா, ஐரோப்பா பற்றி தெரியவில்லை ) கனடாவில் ஒரு கருப்பின பெண் வந்து SP15 ( அதாங்க ஃபர்னஸ் கீரிம் ) போட்டால் வெள்ளைக் காரி ஆகிவிடுவேன் என்றோ ? அல்லது கொஞ்சூண்டு சொட்டுநீலம் போட்டால் துணி வெள்ளையாகி பளிச் ஆகின்றது என்றோ விளம்பரங்கள் வந்ததாக பார்த்ததே இல்லை ... !!!

  மற்றப்படி axe spray விளம்பரம் இங்கும் உண்டு ... நூற்றுக்கணக்கான பெண்கள் வருவது போல் இங்குக் காட்டுவதில்லை ...

  விளம்பரங்கள் என்பது பச்சைப் பொய் என்பது மட்டும் உண்மை ... !!!

  ReplyDelete
  Replies
  1. //நூற்றுக்கணக்கான பெண்கள் வருவது போல் இங்குக் காட்டுவதில்லை ... //

   ரொம்ப மிஸ் பண்றீங்க போங்க..உங்கள பார்த்தா பாவமா இருக்கு..

   (jokes apart, இந்த விளம்பரங்கள் எப்டி சென்சார் பண்ணாம விடராங்கன்னு அதிர்ச்சியாவே இருக்கு..நானும் பாக்யராஜ் மாதிரி axe விளம்பரம் வரும் போது எல்லாம், காச கீழ போட்டு குழந்தைகள தேடவிட முடியுமா என்ன??)

   Delete
 7. பெவிகால் போட்டால் பூமியைகூட காப்பாத்தலாம் http://www.youtube.com/watch?v=4ZY_aMg-3hU

  ஸ்நாக் சாப்பிட குண்டடிபட்டு சாகிறார்! மேல போகபோக சாப்பிடலமாம்! அந்த கம்பெனி ஓனரை செய்யவைக்க வேண்டியதுதானே?

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொருதர்க்கும் இத்தன பீலிங்க்ஸா?? ஆளாளுக்கு பொங்கிடீங்க?
   நான் மட்டும் தான்னு நினைச்சேன்..அவ்வவ்

   Delete
 8. தலைமுடியால வேனைக் கட்டி இழுக்கலாம். ஒரு பைக்கால மலையைக் கடக்கலாம்... அப்பப்பா... எத்தனையோ விளம்பரங்களைப் பார்த்து நொந்த அனுபவத்துல இப்ப நான் டிவியே பாக்கறதில்லப்பா. நிஜம்மா... அழகா எழுதியிருக்கிஙக...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சாரே.. !!

   //இப்ப நான் டிவியே பாக்கறதில்லப்பா. நிஜம்மா...//
   உண்மைய சொல்லுங்க, ரிமோட் உங்க 'கண்ட்ரோல்' ல இல்லங்கறததான இவ்ளோ நாசூக்கா சொல்றீங்க?? விடுங்க..எவ்வளோவோ பார்த்துட்டோம். :-)

   Delete
 9. i shared this website in my fb. 2 - 3 friends said they enjoyed reading....

  ReplyDelete
  Replies
  1. Thank you boss..By the way 2 or 3 (or 2 and half?)? :-)

   Delete
  2. naan veena 1/2 aaka irukkalaaam (என் மனைவியின் கூற்றுப்படி)

   Delete
  3. மனைவி சொன்னத அப்டியே எதுக்கறீங்க பாருங்க, நீங்க நிச்சயம் புத்திசாலி தான்..
   ஆனா அவங்க சொல்ல வந்தது - You are my better HALF!! நீங்க நினைக்கற 1/2 இல்ல.. :-)

   Delete
 10. நல்லா இருக்கு!

  கடலுக்குச் சென்றுதான் காற்று வாங்கவேண்டும் என்ற நிலையை மாற்றிய சிப்ஸ் பாக்கெட்டின் விளம்பரம்,போராட...வேண்டும்...என்று தூங்கும் குழந்தைகளை எழுப்பிவிடும் விளம்பரம் இவற்றையும் சேர்த்திருக்கலாம்!

  இப்படிப்பட்ட விளம்பரம் வரும்போது,கிளம்புறம்னு சேனல் மாத்துறதுதான் ஒரு சிறந்தவழியாகப்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. இப்போதைக்கு நான் பண்ணுவது இது தான் - விளம்பரம் வரும்போது ம்யூட் செய்துவிடுவது..அதனால் இம்சை பாதியாக குறைகிறது. :-)

   Delete
 11. Poruthu poruthu, indru pongi ezhunthitiye vigna :) :)

  ReplyDelete
  Replies
  1. கமெண்ட் பூராவும் படிசேன்னா, பொங்கினது யாருன்னு தெரியும். :)

   Delete
 12. எனக்கு த்ரிஷாவையும், என் கணவருக்கு கட்ரினாவையும், மகளுக்கு ஐஸ்வர்யாவையும், மாமியாருக்கு பயத்தமாவையும் பிடித்திருக்கிறது..///சூப்பர் கமெண்ட்.

  ஆண்களின் பிரச்னையை அதிகம் சொல்லவேயில்லையே...ஒரு அணைக்கட்டின் மேலிருந்து குதித்து கூல் டிரிங்க்ஸை எடுத்து வந்து பெண்ணிடம் கொடுக்கணும்...இதெல்லாம் பார்த்து பெண்கள் இந்தமாதிரியே எதிர்பார்த்தா என்னாகிறது...

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு தான் AXE Deodorant இருக்கே? எடுத்து அடிச்சுகோங்க, பெண்கள் தானா வருவாங்க.

   Delete
 13. இந்தியாவில் இருக்கும் விளம்பரங்கள் தான் கொஞ்சம் ஓவராகப் போய்க் கொண்டிருக்கின்றது என நினைக்கின்றேன் ( அமெரிக்கா, ஐரோப்பா பற்றி தெரியவில்லை ) -இக்பால் செல்வன்...

  நான் மூன்றுமாதங்கள் லண்டனில் இருந்தவரை அங்கே விளம்பரங்கள் படு மோசமாய் இருக்கும்.நிறம் பச்சைதான்.

  ReplyDelete
 14. பதின்பருவத்தினர் இந்த விளம்பரத்தையெல்லாம் நிஜம்னு நம்பி -நிஜமான நிஜம் ஏன் இந்தமாதிரி இல்லைன்னு கேள்வி கேட்டா....

  ReplyDelete
 15. விவரமா தான் தலைப்பு வச்சிருக்கீங்க

  ReplyDelete
 16. அருமையான் பதிவு! இது தான் முதல் முறை உங்கள் தளத்திற்கு வந்து படிப்பது. Hats off to you :-)

  amas32

  ReplyDelete
 17. naanga romba usharu illa.... pathiva keezha irundhu padikka aarambibom...

  ReplyDelete
 18. அருமை. அமேசான் காடுகளில் மட்டுமே கிடைக்கும் எர்வாமேடின் தைலத்தின் விளம்பரத்தை மறந்திட்டீங்க. ஒரு ஹமாம் சோப்பு விளம்பரத்தில், ஒருவன் குழந்தையை "புதருக்கு போனால் "உன்" அம்மா வந்து கிருமி என்று பயங்கரமா" .. என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒருத்தி வந்து " "என்" வீட்டில் அதற்க்கு பயமே இல்லை" என்று சொல்லுவாள். அப்படியென்றால் இந்த இருவரும் கணவன் மனைவி இல்லையா? என்ன உறவு?

  அதிக விளம்பரத்தால் அதுவும் அடிக்கடி ஒரே விளம்பரம் கடுப்புதான். ஆனால் என்ன செய்ய? அவைகள் இருந்தால்தான் சானலுக்கு வருமானம். பல நல்ல புரோகிராம்கள் பார்க்க முடிகிறது.தேக ஆரோக்கியம், உடலின் நிறம், உடல் மெலிய,நீல கூந்தல், குழந்தைகளின் ஜாபக சக்தி இதில் பாதிக்க பட்டவர்கள், எதை தின்றால் பித்தம் தெளியும் என்று எண்ணுபவர்களை ஒரே ஒரு தடவையாவது வாங்க வைத்துவிட வேண்டும் என்ற நோக்கிலும், ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் யாரும் நம்பி விடுவார்கள் என்ற உத்தியாளும்தான் விளம்பரங்களை தயாரிக்கிறார்கள்.இதே போல, பார்க்கிரவர்களை உடனே எரிச்சலடையும் முகம் சுளிக்க வைக்கும் விளம்பரங்கள் எல்லோராலும் வெறுக்கபடுகின்றன என்று தெரிந்தால் ஏக குஷி. ஏனென்றால் அவைகள் சீக்கிரம் நிறைய பேர்களுக்கு சேர்ந்துவிட்டன என்று அர்த்தமாம். இதில் என்ன கொடுமை என்றால், ஹிந்தியில் எடுத்த விளம்பரங்களுக்கு மொழிமாற்றம் செய்து தமிழில் வெளியிடுவாங்கே பாருங்க, ரொம்ப அபத்தமா இருக்கும். நன்றி வாழ்த்துக்கள். வாழ்க வளர்க

  ReplyDelete
 19. நுகர்வு கலாச்சாரத்தின் உச்சத்தின் சாரம் இது!

  ReplyDelete
 20. superah sonnenga madam..
  , "உங்க டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?" என்று ஒரு நடிகை தினமும் வந்து மிரட்டுகிறார். என் பேஸ்ட்டில் இருப்பது உப்பா, சர்க்கரையா...ன்னு நான் கண்டுபிடிப்பதற்குள், எதுக்காகவும் facebook பக்கமே வராத தோழி, நான் உபயோகிக்கும் டூத் பேஸ்ட்டில் இருப்பது 'நிகோடின்' என்று ஒரு செய்தியை போட்டு, பிடித்து கொண்டிருந்த கடைசி ஆணியையும் பிடுங்கிவிட்டு மாயமாகிறாள்.

  ReplyDelete
 21. உங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது. நேரம் இருக்கும்போது வந்து பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_11.html

  ReplyDelete
 22. வாய் விட்டுச் சிரிச்சேன். நன்றி.

  ReplyDelete
 23. நான் தலைப்பைப் பார்த்து வரலீங்க... வலைச்சரம் பார்த்து வந்தேன்...

  ReplyDelete