Friday, 13 July 2012

எனக்காக இது கூட செய்ய மாட்டியா?

எங்கள் வீட்டு தொலைக்காட்சியில் ஒரு நாடகம் போய்கொண்டிருக்கிறது - அதில் ஒரு காதலி, தன் காதலனை எதற்காகவோ, "எனக்காக இது கூட செய்ய மாட்டியா?" என்கிறாள். அங்கே தொடங்குகிறது என் பிளாஷ்பேக் மற்றும் இந்த பதிவு !!

Madhubala - Ek Ishq Ek 12th July 2012 Video Watch Online
                            

கல்லூரி முடிந்ததும் நானும் வேலைக்கு போவேன் என்று அடம் பிடித்து பெட்டியை கட்டிக்கொண்டு சென்னைக்கு வந்தாயிற்று.(தமிழ் படங்களில் வருவது போல எனக்கும் ஒரு மாமா சென்னையில் இருந்தார்(இருக்கிறார்)!).

சொற்ப சம்பளத்தில் ஒரு வேலையும், அதைவிட சொற்பத் தேவைகளும் இருந்த அழகிய காலகட்டம்.

எங்கள் அலுவலகத்தில் பெரும்பாலும் திருமணமாகாதவர்கள் தாம். ஒன்றிரண்டு காதல் ஜோடிகளும், மற்ற அனைவரும் நல்ல நண்பர்களாகவும் இருந்தோம். பெண்கள் கல்யாணம் வரையிலும், பையன்கள் வேறு நல்ல வேலை கிடைக்கும் வரையிலும் அங்கே ஒட்டிக் கொண்டிருப்பது, அந்த கம்பெனியின் எழுத படாத சட்டம்.


மதிய உணவு இடைவேளைகளில், எங்களுக்கான வரன் தேடல்களையும், ஆண் நண்பர்களின் இன்டெர்வியு கதைகளையும் சேர்த்தே கொறித்துக்  கொண்டோம். இப்போதும் சொல்வேன் - நண்பர்கள் நிறைய இருப்பவர்கள் சிடுமூஞ்சியாக இருப்பதில்லை. (அல்லது சிடுமூஞ்சிகளுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பதில்லை). அவர்கள், 'என்ன கன்றாவி ஹேர் ஸ்டைல் இது?' என்றால் நமக்கும், 'ராமராஜன் கிட்டயிருந்து பழசு-பட்டு வாங்கி வந்துட்டியா?' என்றால் அவர்களுக்கும் கோவம் வருவதில்லை..மாறாக, இப்படி சீண்டப்படுவதை மனம் ஒருவகையில் எதிர்பார்கின்றது..


எல்லாருமே நல்ல நண்பர்கள் தான் எனினும், அவரவர்கென்று விசேஷமான நண்பர்களும் உண்டு! எனக்கும் ஒரு அப்படி ஒரு நண்பன் வாய்த்தான்.. ஒருவரை திட்டிக்கொண்டே நேசிக்க முடியுமா? முடிந்தது. ஒரு நாள் கூட எங்கள் பேச்சு சண்டையில் முடியாமல் இருந்ததில்லை.. அதற்காக அடுத்தநாள் பேசாமல் இருக்க முடிந்ததும் இல்லை. எல்லாவற்றிலும் ஒரு மாற்று கருத்து இருந்தது அவனுக்கு! எமகாதகன்.

மற்றுமொரு நண்பர் குழாம்-- என் பிரியத்துக்குரிய தோழியும், அவளது நண்பனும்.. இவர்கள் ideal நண்பர்கள்..இவர்கள், சண்டை போட்டு பார்த்ததேயில்லை. ஆனால், அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது.. ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறையும், வெளியே போய் புகை பிடித்துவிட்டு, ஹீரோவின் அறிமுக காட்சிபோல் புகைமண்டலத்தின் நடுவில் இருந்து வருவான். என் தோழி அவனை மாற்ற 'பகீரத' பிரயத்தனம் பண்ணிக்கொண்டிருந்தாள்.. ஒரு வழியாக என் தோழியின், 'எனக்காக இது கூட செய்ய மாட்டியா? 'வில் விட்டும்விட்டான்.

இதை பற்றி பேசி என் 'எமகாதக' நண்பனிடம் சிலாகித்து கொண்டிருந்தேன். பொறுமையாக கேட்டுக்கொண்டு, கண்களை நேரே பார்த்து -
 'பெண்கள் emotional blackmail செய்வதில் வல்லவர்கள்!' என்று பேரதிர்ச்சி தந்தான்.
நான், பெரிய பெண்ணியவாதி இல்லைதான். இருப்பினும், குறைந்த பட்ச மான-ரோஷம் இருக்கே? அன்றைய சண்டை ஆரம்பமானது..
முடிவாக நான், 'அப்படியே பெண்கள் ப்ளாக்மெயில் பண்ணுவதாகவே இருக்கட்டும், அதனால் விளைவது நன்மைதானே?' என்றேன். அதற்கு நண்பன், 'இந்த மாற்றம் நிலையானது இல்லை. அவர்களுக்குள் சின்ன சண்டை வந்தாலும், பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு திரும்பவும் புகை பிடிப்பான்' என்றான்.


அப்படியே அட்சரம் பிசகாமல் நடந்தது. நம்புவீர்களா?

இன்று உலகின் வெவ்வேறு அட்சய- பூமத்திய ரேகைகளில் பிரிந்து இருக்கிறோம்.. யாராவது ஒரு பெண்-ஏதேனும் ஒரு நிகழ்வு, என்னை அவனுக்கு நினைவுப்படுத்துமா?? தெரியாது! தெரிந்து கொள்ளவும் வேண்டாம். ஆயினும், எங்கே - எப்போது 'எனக்காக இது கூட செய்ய மாட்டியா?' வை, யார் சொல்லிக்கேட்டாலும் நினைவு பின்னோக்கி போய்விடுகிறது..

யாரையும், யாராலும் மாற்ற முடியாது; அவர்களாக மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளாத வரை!! - இதை, அன்று கடைசி வரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.. இப்போது, கடைசி வரை நினைவில் வைத்திருப்பேன் என தோன்றுகிறது.

இன்று பதிவு எழுதுவதற்கு முன், என் கணவரிடம், "எனக்காக எதையாவது மாற்றிக்கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டேன். கணினியில் இருந்து கண்ணை எடுக்காமல், "ம்ம்?" என்கிறார். மீண்டும் கேட்டேன். இம்முறை, 'ம்ம்' கிடைக்கவில்லை- விடை கிடைத்து விட்டது!

45 comments:

 1. நன்றாக இருந்தது....எனக்கும் ஒரு பிளாஷ்பேக் சம்பவம் ஓடுச்சு!!! இறுதி வரிகள் உண்மையின் உறைகல்!!!சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது தான், அது மத்தவங்களுக்கும் நடந்திருப்பதும் அவர்கள் அதை நினைவு கூர்வதும் தெரிய வருகிறது, சந்தோசமான தருணங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நம் வாழ்கையின் மிச்சமாக இருக்க போவது , நம் செயல்களும் , நம்மை பற்றிய நினைவுகளும் தானே? அவ்விரண்டும் பிறருக்கு மகிழ்ச்சியை அளிக்குமாயின் நம் பிறவியை பயனுள்ளதாக கருதலாம். :-)

   நன்றி நண்பரே.

   Delete
 2. உண்மைதான்! குஷி படத்திலும் ஜோதிகாவிடம் சண்டை போட்டபின் விஜய் புகைப்பிடிப்பார்! இதுதான் நிஜமும்!

  ReplyDelete
  Replies
  1. அந்த காட்சி எனக்கும் Déjà vu

   Delete
 3. //யாரையும், யாராலும் மாற்ற முடியாது; அவர்களாக மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளாத வரை!!// So True!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் Flashback? :-)

   Delete
 4. உண்மை!!!
  //யாரையும், யாராலும் மாற்ற முடியாது; அவர்களாக மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளாத வரை!!//
  நல்லா இருக்கு.

  இன்னும் ஸ்வாரஸ்யமா எழுதுங்க. கன்டென்ட் இருக்கு :-)

  வாழ்த்துகள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்ண்ணா :))

   Delete
  2. nice post vigna!

   Delete
 5. Absolutely impressed.. I am more taken with the way it is written without being preacy but anecdotal..will have a better effect in atleast considering this thought process. Lovely Vigna.. :)

  Food for thought: you should also write about the so called "scarificers" which leaves people bitter or more expectant after they do bcos they keep score and are 100% conscious about what they sacrificed..

  ReplyDelete
  Replies
  1. என்னலாமோ சொல்ற..புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு..இரு, எதுக்கும் நன்றி சொல்லிடறேன்..

   தேங்க்ஸ் வித்யா :))

   Delete
 6. Replies
  1. நீங்க டைரக்டர் மணிரத்னம்க்கு வசனகர்த்தா தானே?

   Delete
  2. ஹைய் இப்போ 2 எழுத்து.. :))

   ஏங்க 'பாரதி' பேர்ல இருக்கும் போது, வார்த்தைல என்ன சிக்கனம்?

   Delete
 7. Very Nice Vigna.. While reading I also travelled along with you in your wonderful flashback world..
  Krithika.

  ReplyDelete
  Replies
  1. It is wonderful because of you guys. :-)

   Delete
 8. ரொம்ப அருமையான பதிவு, நிறைய நினைவுகளை தூண்டிவிட்டு விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கதிரவன் சார். உங்க பேர் ரொம்ப பிடிச்சிருக்கு :-)

   Delete
 9. யாரையும் யாராலும் மாற்றமுடியாது என்ற தெளிவுக்கு வந்தபிறகும், தெரிந்தே போடக்கூடிய சண்டைதான் சுவாரஸ்யம் ;))) மொத்தத்துல டயர்டாகிப் போன நேரத்துலதான் இந்த ஞானோதயம் வரும்.வந்துருக்கும்....

  ReplyDelete
  Replies
  1. முடிஞ்ச வரையில் நம்ம சுத்தி இருக்கவங்கள குறை-நிறைகளோட அப்டியே ஏத்துகறது தான் புத்திசாலித்தனம். நமக்கு தப்புன்னு தோன்ற விஷயம் அவங்க பார்வைல சரி யா இருக்கு..
   அதிகபட்சம், நாம தவறுகள சுட்டி காட்டலாம்,ஆனா எடுத்துகரத அவங்க கைல விட்டுனும்.

   // டயர்டாகிப் போன நேரத்துலதான் // அதென்னமோ உண்மைதான். :-))

   Delete
 10. பெண்கள் சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள் என்பது என் அபிப்ராயம்.அது எமோஷனலாக வைத்திருக்கும்.ப்ளாக்மெய்ல் போலத் தோன்றும்.ரொம்ப பெரியதாக கனவு வேண்டுமானால் காணுவார்கள்.ஆனால் செயல்படுத்துவதில் சின்ன சின்ன விஷயம்தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
  ஆணின் பார்வையில் இந்த எனக்காவெல்லாம் செய்ய மாட்டியாவெல்லாம் சீரியஸாவே எடுத்துக்கிறதில்லை.

  ReplyDelete
  Replies
  1. இந்த Blog title அதுதான் பாஸ் - Men are from Mars ; Women are from Venus !!

   ஆணும், பெண்ணும் குணாதிசயத்தில் இரு வேறு கோள்களில் இருக்கிறார்கள்.. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் அல்லது மாற்றும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது / இருக்கும்.

   Delete
 11. ஹாய்... எதனால இந்த ப்ளாக் டைட்டில்னு யோசிச்சு இதுவாத்தான் இருக்குமான்னு ஒரு எண்ணம் எனக்குள்ள இருந்தது. அது சரின்னு இப்ப புரிஞ்சு போச்சு. Men are from Mars; Woemen are from Venus! சூப்பரான, நான் விரும்பிப் படிச்சு ரசிச்ச புத்தகம். உண்மையில் உங்களின் இந்தப் பதிவு என்னை பழைய நாட்களுக்கு இட்டுச் சென்றது என்பது நிஜமான நிஜம். யாரும் யாருக்காகவும் மாறிவிட முடியாது. தானாய் உணர்ந்து மாறினால்தான் நீடிக்கும். அருமையான பதிவுங்க. சூப்பர்ப்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார். ஆரம்பத்தில் என் பையன்-பெண் பற்றிய இருவேறு குணாதிசயங்கள், குறும்புகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிகொண்டிருந்தேன். அதனால் My Mars and Venus என்று பெயரிட்டேன்..

   நன்றி சாரே. அடிக்கடி வாங்க கம்பெனி பக்கம். :-)

   Delete
 12. இன்று பதிவு எழுதுவதற்கு முன், என் கணவரிடம், "எனக்காக எதையாவது மாற்றிக்கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டேன். கணினியில் இருந்து கண்ணை எடுக்காமல், "ம்ம்?" என்கிறார். மீண்டும் கேட்டேன். இம்முறை, 'ம்ம்' கிடைக்கவில்லை- விடை கிடைத்து விட்டது!

  அதான .... புருஷன் ஒன்னுமே சொல்லலனாலும், தனக்கு தேவையான அர்த்தத்த எடுத்துக்கலன்ன, என்ன பொண்டாட்டி

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..வீட்டுக்கு வீடு வாசப்படி.

   Delete
 13. எனக்காக இது கூட செய்ய மாட்டியா?

  ReplyDelete
  Replies
  1. செஞ்சுட்டா போச்சு!! :-)

   Delete
 14. யாரையும், யாராலும் மாற்ற முடியாது; அவர்களாக மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளாத வரை!! - அப்பட்டமான உண்மையை போட்டுடைத்து விட்டேர்கள்..
  மாற்று கருத்து உள்ள நண்பர்கள் இருப்பது ஆரோக்கியமான விஷயமே :)

  இது, எதார்த்த சிந்தனையை தூண்டியும் ஒற்றுக்கொள்ளவும் வைக்கக்கூடிய ஒரு பகுப்பாய்வு..

  ஒரு பெண்ணாக நீங்கள் ஞாபகம் வைத்திருக்கும் அளவுக்கு உங்கள் நண்பர் இதே காரணத்திற்காக ஞாபகம் வைத்திருக்க வாய்ப்புகள் குறைவே..பெண்களுக்கு ஆண்களை விட emotional attachments ரொம்ப நிறைய..:)

  --Senthil

  ReplyDelete
 15. கோவை அனுராதாவிடம் உங்களுடைய ப்ளாக் பற்றி சொல்லிருக்கேன். உங்களுடைய ப்ளாக்கின் கருதான் அவருடைய அடுத்த சீரியலின்
  தொடக்கமாக இருக்கும். நன்றி - சுப்ரமணியன்

  ReplyDelete
  Replies
  1. செல்லாது செல்லாது..

   இங்கே நான் தான் எல்லாரையும் கலாய்பேன். என்ன யாரும் கலாய்க்க கூடாது! :-)

   Delete
 16. //யாரையும், யாராலும் மாற்ற முடியாது; அவர்களாக மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளாத வரை!! //
  ஆனா அந்த மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலையை உருவாக்க உதவ முடியும்.... நம்முடைய நிஜமான நல விரும்பிகளால், இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமா..

   (அந்த நம்பிக்கை யாருக்கு இருக்கோ இல்லையோ, எல்லா மனைவிக்கும் இருக்கும்)

   Delete
  2. இத ஏன் gender specific காக பார்க்கனும்? ஏன் எல்லா கணவர்களுக்கும் இருக்க கூடாது? இது தான் பெண்களின் "சுயபச்சாதாபம்" என்பதா?

   Delete
  3. அவ்வ்வ்வ்!! இது தான் தெளிய வச்சு, தெளிய வச்சு அடிக்கறதா?

   சரி, இப்படி சொல்கிறேன் - பெண்கள், தங்களின் விருப்பத்திற்கேற்ப ஆண் மாறுவதையும், ஆண்கள் தங்களை அப்படியே ஏற்றுகொள்ளப்படுவதையும் விரும்புகிறார்கள்.(இது சின்ன சின்ன விஷயம் முதல் பெரிய விஷயம் வரை பொருந்தும்.) சரி-தவறு என்பதை விட இது மனித இயல்பு எனலாம்.

   உங்களுக்கு திருமணமாகவில்லை என்பதே என் கணிப்பு. சரியா?

   Delete
  4. நீங்கள் கூறுவதில் ஒரு சின்ன மாற்றம் செய்தால் நான் ஏற்றுக் கொள்வேன்! சேர்க்க வேண்டிய வார்த்தை "பெரும்பாலும்" ! பெரும்பாலான பெண்கள் ....... & பெரும்பாலான ஆண்கள் ....... சரி-தவறு என்பதுற்குள் நானும் புக விரும்ப மாட்டேன். மனித இயல்பை, ஆண்-பெண் வட்டத்திற்குள் சுருக்கிவிட முயல்வது தவறாகும் என்பது அடியேன் எண்ணம்!
   உங்கள் கணிப்பு சரியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ?

   Delete
  5. அட பாவமே.. யார் தாங்க நீங்க?

   Delete
 17. "யாரையும், யாராலும் மாற்ற முடியாது; அவர்களாக மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளாத வரை!!" முற்றிலும் உண்மை. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்

  ReplyDelete
 18. இல்லறம் என்பது விட்டுகொடுப்பது மற்றும் அல்ல விட்டுகொடுக்க முன்வரும்போது தடுப்பதும் தான்.. நாம் நாமாக இருக்க துணை மகிழ்ச்சியுடன் ஏற்பதுதான் நல்லறம்

  ReplyDelete
 19. அருமை..... பகிர்ந்ததற்கு நன்றி......:)

  ReplyDelete
 20. பதிவின் கருத்து உண்மை, நமக்காய் நாம் சொல்வதை மாற்றி கொள்ள ஒருவர் கிடைத்தால் பாக்கியம்!

  ReplyDelete