Sunday, 15 July 2012

திரை விமர்சனம்

இது என்னோட வெற்றிகரமான 41 வது பதிவு!
ஆனா, இது வரைக்கும் ஒரு திரை விமர்சனம் கூட எழுதினதில்ல. நானெல்லாம் ஒரு தமிழச்சியான்னு உங்க ரத்தம் கொதிக்கனுமே? எனக்கு கொதிக்குதுங்க, உள்ளுக்குள்ள..

இப்போ நான் எழுதபோற பட விமர்சனம், நீங்க ஏற்கனவே பார்த்த படமா கூட இருக்கலாம். ஆனா, நான் கடைசியா பார்த்த படம் இது தான். அதனால இதையே விமர்சனம் பண்றேன் -


படத்துல வர்ற கேரக்டர்கள் -

நாயகன் - நம்மாளு, பெண்களை - 'சூப்பர் பிகர்', 'சுமார் பிகர்' மற்றும் 'அட்டு பிகர்' என நேர்த்தியாக பாகுபடுத்தும் வேலையை நண்பர்களோடு சேர்ந்து செய்கிறார். அவர் கண்களில் படித்து கொண்டிருக்கும் நாயகி பட, விடாமல் அவர் போகும் இடமெல்லாம் சென்று பாட்டு பாடி மனசை கரைக்கிறார்.

நாயகனின் நண்பன் - இவரை காதலுக்கு உதவுவதற்காகவே, அவர் வீட்டில் 'நேர்ந்து' விட்டிருக்கிறார்கள். எத்தனை அசிங்கப்பட்டாலும், அவமானப்பட்டாலும், கூச்சமில்லாமல் த்யாக உள்ளதோடு உதவி செய்கிறார், பின்னால் நின்று டான்ஸ் ஆடுகிறார், கடைசியில் வில்லனிடம் செம அடி வாங்குகிறார்.

நாயகி - இவர் கொஞ்சம் லூசு ! இவரோட பேர் மட்டுமில்ல, முகம் கூட சில வினாடிகளே வர்றதால மனசுல நிக்கல..ஆனா அதிக முறை காட்டப்படர இன்ன பிற விஷயங்கள் பற்றி இந்த ப்ளாக் ல பேசமுடியாது! (நம்ம கம்பெனி கொஞ்சம் டீசன்ட்டு). எப்டியோ காதல் வருது..

பெற்றோர்கள் - நாயகனின் பெற்றோர்கள் ரொம்ப நல்லவங்க. எப்டினா, படத்துல அப்பா பையனோட சேர்ந்து சரக்கடிப்பார். அம்மா சைடு டிஷ் கொண்டுவருவாங்க. முக்கியமா, 'அந்த பொண்ண என்ன ஆனாலும் கைவிட்டுடாத!' ன்னு சொல்லி அவனுக்கும் ஒரு லட்சியத்த(?) உருவாக்கறாங்க.

பெண்ணோட பெற்றோர் -இவர்கள் கெட்டவங்க. பொண்ணு தான் விரும்பிட்டாளேன்னு நினைக்காம, நிலையான வேலையில்லாத, நித்தம் சரக்கடிச்சு மட்டையாகும் ஒரு துடப்பக்கட்.. யை விரும்புவதா என்று அர்த்தமில்லாமல் கோவப்படுகிறார்கள். பணக்கார திமிர்தான், வேற என்ன?

வில்லன்- இவன் மார்கெட்டுக்கு வர்ற நாயகனோட தங்கைய கைய பிடிச்சு இழுக்கறான்.. இதே தானே ஆரம்ப காட்சில நாயகனும், நாயகிய பண்ணினான்னு கேட்காதீங்க. நாயகிக்கு அண்ணன் இல்ல. இந்த பொண்ணுக்கு இருக்கு. கடைசியில இந்த வில்லன் ஒரு அரசியல்வாதியோட தம்பி.. (சாரி, ஒரு ரவுடியோட மச்சான். சரி. ரெண்டுல எதோ ஒண்ணு )

சண்டை காட்சிகள் ஏராளம். ஆனால், பாவம் நம்ம ஹீரோ commerce group எடுத்து படித்ததால், நியூட்டன் பற்றி தெரிந்திருக்கவில்லை. புவியீர்ப்பு விசை, வீசம் என்ன விலை என்று கேட்கிறார். இருந்த இடத்திலிருந்து அப்படியே உயர பறந்து, பத்து பேரையாவது அடித்து விட்டு கிழே இறங்குகிறார்..வில்லனின் ஆட்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் பழக்கத்தை நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

பாடல்கள் : வசனம் அல்ல பாடல்கள் தான் என்று அவர்கள் ஆட தொடங்கும் போது புரிகின்றது. நாயகி, கொளுத்தும் சென்னை வெய்யிலில் ஜீன்சும், பனி மலைகளில் அரைகுறை ஆடையும் அணிகிறார்! (அதான் லூசுன்னு சொல்லியாச்சே?) இது தவிர ஒரு சோக பாடல் இருக்கின்றது - முதல் முறை கேட்கும் போது, நான் நாயகனுக்கு வயிற்று வலி தான் என நினைத்துவிட்டேன், ரொம்ம்ம்ம்ம்பவே முக்கி முக்கி பாடுகிறார்.
படத்தின் கதையை யாரோ ஒரு ட்விட்டர் தான் எழுதியிருக்க வேண்டும்.. 2 வரிகளுக்குள் வருமாறு யோசித்திருக்கிறார்.

காதலின் மகத்துவத்தையும், பணம் இல்லாமல் கூட இருக்கலாம் - குணம் இருந்தால் போதும்ன்னு கடைசி சீன்ல எல்லாரும் புரிஞ்சுக்கறாங்க. (குணத்த வச்சு கத்திரிக்கா வாங்கறதா ஒரு காட்சி வச்சிருக்கலாம் - இது என்னோட ஆதங்கம்). உபரியா, ஜாதி-மதம்-ஊழல் எல்லாம் ஒழியும் போது தான்  நம்ம நாடு (தமிழ் சினிமாவும்) உருப்படும்னு ஒருமாதிரியா புரிஞ்சுக்கறோம்...

ஆங்!! படத்தோட பேரு விட்டுட்டேனே ? யோசிச்சு பார்த்தேன்.. ஒரே குழப்பம். நிறைய பட பேர் ஞாபகத்துக்கு வருது.. ப்ளீஸ், நீங்களாவது சரியான டைட்டில் கண்டு பிடிச்சு எழுதுங்களேன்.
31 comments:

 1. Replies
  1. 'டைட்' டா தான் இருக்கீங்க.

   Delete
 2. சூப்பர் - வில்லனின் ஆட்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் பழக்கத்தை நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அது என் நண்பரின் ட்வீட் (அறிவு @arivucs )

   பதிவுக்காக பயன் படுத்திகிட்டேன். :-)

   Delete
 3. Replies
  1. யாரு, நீங்களா? தெரியலையே..உங்க வீட்ல தான் கேட்கணும். :-)

   Delete
 4. கோடி கணக்கில் பணம் கொட்டி எடுத்த படங்களுக்கு இந்த மாதரி திரை விமர்சனம் எழுதினால். ஒண்ணு செய்யலாம் தமிழ் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு ஆங்கிலப்படம் பார்க்கலாம். ஆங்கிலப்படம் என்றால் எந்த மாதரி இருந்தாலும் ஒத்துகொள்வோம்

  ReplyDelete
  Replies
  1. உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியுது..சீக்கிரமே ஒரு இங்கிலீஷ்யும் படத்த கலாய்ச்சிடுவோம், கவலைய விடுங்க.. :-)

   Delete
 5. இது ரொம்ப்ப ஓவர்!! ஜெனரல் சினிமா டெக்னிக்லாம் இப்படி பிரிச்சி மேஞ்சி ஊருக்கெல்லாம் பந்தி வைக்கப்படாது திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தோட சார்பில உங்க மேல வழக்கு போடலாம்னு இருக்கோம் ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. போடறது போடறீங்க திகார்ல இருக்கமாதிரி போடுங்க..வரும்போது VIPயா வருவோமில்ல?

   Delete
 6. >>
  நாயகி - இவர் கொஞ்சம் லூசு ! இவரோட பேர் மட்டுமில்ல, முகம் கூட சில வினாடிகளே வர்றதால மனசுல நிக்கல..ஆனா அதிக முறை காட்டப்படர இன்ன பிற விஷயங்கள் பற்றி இந்த ப்ளாக் ல பேசமுடியாது! (நம்ம கம்பெனி கொஞ்சம் டீசன்ட்டு).


  >>படத்தின் கதையை யாரோ ஒரு ட்விட்டர் தான் எழுதியிருக்க வேண்டும்.. 2 வரிகளுக்குள் வருமாறு யோசித்திருக்கிறார்.

  லொள் ;-0

  ReplyDelete
 7. ??>>>>>> Your comment will be visible after approval.


  பிரபல பதிவர்??????

  ReplyDelete
  Replies
  1. நாமலே ஒத்துகலனா எப்டி?

   Delete
 8. தொழில் ரகசியத்த இப்படி பப்பிளிக்கா சொல்லலாமா மாமா??

  ReplyDelete
  Replies
  1. மாமாவா? அவ்வ்வ்..நான் மாமிங்க!

   Delete
 9. சாரிங்க நான் உங்க பேர சரியா கவனிக்கல... :(

  ReplyDelete
  Replies
  1. மன்னிச்சாச்சு..மன்னிச்சாச்சு!! :-)

   Delete
 10. ஹீரோ துப்பாக்கியால ஸ்கிரீனைப் பார்த்து சுட்டுத்தள்றதை சேர்க்கவில்லை.பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் சரக்கடிக்கிற ஸீன் வரணும்.

  ReplyDelete
  Replies
  1. நண்பா..உங்க கஷ்டமும்,'தல' வேதனையும் எனக்கு புரியுது..

   பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! - நான் நமக்கு சொன்னேன் :-)

   Delete
 11. ஹா..ஹா..

  தற்போதைய தமிழ்ப்படங்களின் விமர்சனத்துக்கான‌ standard format ஒன்றைக்கொடுத்துள்ளீர்கள்.
  ஹீரோ,ஹீரோயின்..etc பெயர்களை மட்டும் எடிட் செய்து,சில டிங்கரிங் வேலை பார்த்து எல்லா படங்களுக்கும் எழுதலாம் விமர்சனம்.இந்த ஃபார்மேட்டை வைத்து,வெகுஜனமும் எழுதலாம் விமர்சனம்,இதுதான் நிதர்சனம்.
  (பாடல் காட்சிகளின்போது கேண்டீன்ல நல்ல வியாபாரம் பத்தி எழுதவே இல்ல..)
  'படத்தின் கதையை யாரோ ஒரு ட்விட்டர் தான் எழுதியிருக்க வேண்டும்.. 2 வரிகளுக்குள் வருமாறு யோசித்திருக்கிறார்'...
  நல்லவேளை அவர் 140 கேரக்டரையும் யூஸ் பண்ணல!
  Keep Rocking:-))

  வாழ்த்துக்கள்
  அறிவு

  ReplyDelete
  Replies
  1. //(பாடல் காட்சிகளின்போது கேண்டீன்ல நல்ல வியாபாரம் பத்தி எழுதவே இல்ல..)//

   அத நான் எழுத முடியாதுங்களே? நான் எல்லா 'புத்தம் புதிய' படமும் சின்னத்திரை வரலாற்றில் முதல் முறையா வரும் போது தானே பார்க்கறேன். :(

   Delete
 12. vigna இந்த விமர்சனம் போலவே இன்னொரு விமர்சனம். ஆனால் சீரியசாக http://www.vinavu.com/2012/07/20/kadhalukku-mariyadhai-movie-review/

  ReplyDelete
  Replies
  1. படிச்சேன் சார். பகிர்வுக்கு நன்றி!

   Delete
 13. ஏமாற்றம் Vigna! இந்த blogல நீங்க சுத்த out of form! IPL 2012ல கங்குலிய பார்த்த மாதிரி இருந்தது! மீண்டும் விட்ட formஅ எட்டிப் பிடிக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்!! இப்டி ஒரு கமெண்ட் போட்டு chloroform குடுத்திட்டீன்களே??

   Delete
 14. எல்லா படங்களிலும் இப்படித்தான் இருக்கிறது என்பதை மிக அழகாக அருமையாக எழுதி கலாய்த்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 15. தங்கச்சிக்கு டிரஸ் எடுக்க விஜய் மெட்ராஸ் வரார்.. அங்க ரௌடிங்க போலீஸ அடிச்சு மாமூல் வாங்கி, தங்கச்சி தாவணிய இலுதுட்டாங்க, அப்புறம் என்ன?
  தலைவர் எல்லா ரௌடி யை யும் கொன்னு ஆசின்னோ, ஹன்சின்காவோ கூட ஆடி, சந்தனாமோ வடிவேலோ கூட காமெடி பண்ணி அம்மாவையோ தங்கச்சியோ தகனம் பண்ணி..
  திரும்பவும் ஊருக்கு போயி சாதாரண வாழ்க்கை வாழ.. இந்த கதைக்கு சாரி சிதைக்கு சுராவோ இறவோ, கில்லியோ பல்லியோ னு பேரவச்சு..
  கொல்லுங்கடா..கொல்லுங்க.. அறிஞ்சர் அண்ணா சொன்ன எதயும் தாங்கும் இதயம் எங்களுக்கு இருக்கு...

  ReplyDelete
 16. முதல் வருகை....கடைசியாய்....

  ReplyDelete
 17. ம்ம்ம்... டெம்ப்ளேட் விஷயங்களை வெச்சு இப்படிக்கூட விமர்சனம் எழுத முடியுமா... எப்பவும் சிரிச்சுக்கிட்டே ஒரு கேரக்டர் வந்தா பின்னால பிழியப் பிழிய அழப்போறதுங்கற விஷயம்... குண்டிடி பட்ட பின்னாலயும் ஹீரோ மட்டும் வசனம் பேசறதுன்னு இன்னும் நிறைய நிறைய இருக்கே... முக்கியமா கெட்டவனா இருக்கற ஹீரோவை பொண்ணுங்க தொரத்தி தொரத்தி லவ்(?) பண்றது...!

  ReplyDelete
 18. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.நேரம் இருந்தால் பாருங்கள்

  ReplyDelete
 19. great stuff, i like your blog its helpful
  B.ed Result 2016

  ReplyDelete