Sunday, 12 August 2012

ட்வீட் எடு கொண்டாடு!

ட்விட்டரிலும் இருக்கிறேன்.(@VignaSuresh). அங்கே ட்விட்டியதை இங்கே பகிர்கிறேன்.

நட்பு -

 • மது அருந்தும், புகைக்கும் மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல, கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களே!!  # கற்று தந்தது நட்பு

நாம் போட்ட சண்டைகள் மறந்துவிடுகின்றன.. நமக்காக போடப்பட்ட சண்டைகள் மறப்பதில்லை !

 • வாழ்வின் சிறு சிறு சுவாரஸ்யங்களில் ஒன்று, நம்மை பற்றி நமக்கே மறந்து போன விஷயம் வேறுயாருக்காவது நினைவில் நிற்பது!

எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாத ஒவ்வொரு ஆண் நண்பரிடத்தும் ஒரு சகோதரனே ஒளிந்திருக்கிறான்! 


காதல் - 


 • உங்களை போலவே இன்னொரு நண்பர் உங்கள் தோழிக்கு இருப்பது தெரிந்து பொறாமை உண்டானால், அதை காதல் என்று அறிக!


 • காதல் மறுக்கப் பட்டபோதும், நண்பர்களாய் தொடர்வோம் என்பவர்கள், இன்னும் நம்பிக்கை இழக்காதவகள்!


 • பெரும்பாலான காதலை பெண்கள் தான் முதலில் சொல்கிறார்கள்.. கண்களை படிக்கும் திறன் தான் பாதி ஆண்களுக்கு இருப்பதில்லை.


உறவுகள் - 


 • கோவப்படாத அப்பா சாத்தியம்! கண்டிப்பான தாத்தா அசாத்தியம் !                              
 • எப்படியும் சாதம் மீந்து விடுகிறது. தட்டில் மீந்தால் அம்மாவும், பாத்திரத்தில் மீந்தால் நானும் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்கிறோம்..வாழ்வியல் - 


 • சக மனிதர்களை மதிப்பது, அவர்கள் நம்மிடையே சொல்லவரும் விஷயத்தை கவனித்து கேட்பதிலிருந்து தொடங்குகிறது!


 • பிடித்ததை செய்ய எப்படியும் நேரம் கிடைத்து விடுகிறது - பிடிக்காததை செய்யாமல் இருக்க எப்படியும் காரணம் கிடைத்து விடுகிறது !


'நோய்' என்ற இடைப்பட்ட ஒன்று இல்லாவிட்டால், 'எப்படியும் மரணம்' என்பது தவறுகளை அதிகப்படுத்தி இருக்கும்!

தேவதைகளை சிறகுகளோடு தேடாதீர்கள்.. புன்னகையும், அன்பும் சுமந்து உங்களை சுற்றிலும் தான் இருக்கிறார்கள்!

நாம் பெற்ற வெற்றிக்கு உலகம் கூறும் காரணம், உழைப்பா அல்லது அதிர்ஷ்டமா என்பதை அடுத்து வரும் வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கிறது !

 • அறிவியல், ஆராய்ந்த பின் நம்ப சொல்கிறது..ஆன்மிகம், நம்பிய பின் ஆராய சொல்கிறது..


 • நம் மனது நியாயங்கள் தேடி அலைந்தால், நம் செயல் நிச்சயம் தவறானதே!குங்குமத்தில் பிரசுரமான என் ட்வீட்கள்  - 

மடக்கி மடக்கி எழுதுவதெல்லாம் கவிதை என்றால், எனக்கு பிடித்த முதல் கவிதை -- உன் வீட்டு முகவரி!

மகிழ்ச்சியாய் இருக்க சிறந்த தருணம் எது என்று யோசிக்கும் போதே, 'இதோ- இதை நீ யோசிக்கும் இந்த நொடி தான்!' என பதில் தருகிறது மனசு!

"ட்வீட் எடு கொண்டாடு!"
இது என் நண்பர் அறிவு @arivucs இன் கீச்சு!


19 comments:

 1. அருமை, வாழ்த்துக்க‌ள்! தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்!

  ReplyDelete
 2. பேஷ் பேஷ் நன்னா எழுதுங்கோ, நிறைய எழுதுங்கோ....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்லா எழுதுறீங்க.. தொடரட்டும்..:)))

  ReplyDelete
 4. அருமையான பதிவுகள்......

  ReplyDelete
 5. நல்ல பதிவு!

  எல்லோருடைய வாழ்விலும் நடந்திருக்கும் சில விஷயங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! நல்ல எழுத்து நடையுடன்!

  இது இரண்டும் ர்ர்ர்ரொம்ப அருமை!
  பிடித்ததை செய்ய எப்படியும் நேரம் கிடைத்து விடுகிறது - பிடிக்காததை செய்யாமல் இருக்க எப்படியும் காரணம் கிடைத்து விடுகிறது !

  நம் மனது நியாயங்கள் தேடி அலைந்தால், நம் செயல் நிச்சயம் தவறானதே!

  தொடர்ந்து எழுதுங்கள்!வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. Super Vigna... kalakara... Keep it up...
  Krithika

  ReplyDelete
 7. அருமையான ட்விட்ஸ்! குங்கும ட்விட் ரொம்பவே ரசித்தேன்!

  இன்று என் தளத்தில்
  இதோ ஒரு நிமிஷம்!
  மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
  http://thalirssb.blospot.in

  ReplyDelete
 8. குங்கும ட்விட் ரொம்பவே ரசித்தேன்!
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. பின்னூட்டமளித்த அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றி! நன்றி!:-)

  ReplyDelete
 10. அனைத்து ட்வீட்களும் அருமை... பாராட்டுக்கள்...

  குங்குமத்தில் பிரசுரமான ட்வீட்கள் சிறப்பு...

  தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி…


  அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

  ReplyDelete
 11. மடக்கி மடக்கி ezhutinallum onga ooruku letter edhuvum varadhu

  ReplyDelete
 12. நல்லா எழுதுறீங்க. அருமை. நல்ல நடை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. மது அருந்தும், புகைக்கும் மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல, கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களே!! # கற்று தந்தது நட்பு ////


  மது, புகை ரெண்டுமே பிறருக்கு எந்த தீங்கையும் விளைவிக்காதபோது எப்படி அது கெட்ட பழக்கமாகும்? புரியல

  ReplyDelete
 14. இப்பிடி அழகா ரத்னச் சுருக்கமா ட்வீட்டணும்னு தான் நானும் ட்ரை பண்றேன். வர மாட்டேங்குது... சூப்பராட் ட்வீட்டி அதை எங்களோட ஷேர் பண்ணிக் கொண்டாடினதுக்கு ரொம்ப நன்றிங்க யமுனா. மிக ரசித்தேன்.

  ReplyDelete
 15. your way of writing makes reading enjoyable. why don't you reply to mail?

  ReplyDelete
 16. superb,..
  சக மனிதர்களை மதிப்பது, அவர்கள் நம்மிடையே சொல்லவரும் விஷயத்தை கவனித்து கேட்பதிலிருந்து தொடங்குகிறது!

  ReplyDelete