Sunday, 30 September 2012

ஒரு கீச்சரின் டைரி குறிப்பு

ட்விட்டர்ல சேர்ந்த புதுசுல (சுமார் 6 மாதங்களுக்கு முன்) செம வரவேற்பு! வந்தாச்சு Fake-IDன்னு ஒரே ஆரவாரமா இருக்கும். ஆரம்பத்துல ஒண்ணும் புரியலங்க - வண்டவாளம், கலாசல், வட்டஜிலேபிராஸ்கோலு -- இவங்க அங்க உள்ள  பிரபலங்கள். இந்த பேரெல்லாம் ஏத்துக்கிட்டவங்க, விக்னாசுரேஷ் பேருக்கு வாஸ்து சரியில்லன்றாங்கன்னு ஒரே குழப்பம்.. அப்புறம் தான் தெரிஞ்சுது புத்திசாலிதனமா ட்வீட் போட்டா, போடறவங்க பெண்ணா இருக்கமுடியாதுன்ற உயர்ந்த கருத்து(?!). என்னோட கவலையெல்லாம் இப்படி சொல்றவங்ககிட்ட, உங்க மனைவி ரொம்ப புத்திசாலின்னு யாரும் சொல்லிடாம இருக்கணுமேன்னு தான்..

அப்பறம் வேற ஒரு பெண் ஐடி வந்ததால, என் Fake-ID பதவி பறிபோயிடுச்சு.. டகால்ன்னு என்னை ஒரிஜினல் ஐடி ன்னு சொல்லி சுவாரஸ்யத்த குறைச்சுட்டாங்க. ஆனா நான் அதெல்லாம் மனசுல வச்சிகாம பல்க்-மன்னிப்பு வழங்கிட்டேன்.

ட்விட்டர்ல இருக்கறதுல பல சௌகர்யம் -வீட்லகணவன்-மனைவி, மாமியார்-மருமகள் சண்டை இதெல்லாம் வரவே வராது. ஏன்னா நம்ம வீட்டு ஆளுங்க மூஞ்சியே நமக்கு மறந்து போய்டும் - வேணும்னா அவங்களையும் ட்விட்டர்ல இறக்கி விட்டுட்டு டைம்லைன்ல இன்னிக்கி என்ன சாம்பார் வைக்கட்டும்?ன்னு கேட்டுக்கலாம். (Status update போட்ட மாதிரியும் ஆச்சுது  பாருங்க..)

அதிலும்.. கொஞ்சம் ட்வீட், கொஞ்சம் சமையல்ன்னு மாத்தி மாத்தி பண்ணினதுல 60+ வயதான மாமனாரும், மாமியாரும் அவங்க ஆயுசுல சாப்பிட்டேயிருக்காத எலுமிச்சம் பழம் பிழிஞ்ச சாம்பாரையும், சௌசௌ  ரசத்தையும் பண்ண முடிஞ்சுதே?? ட்விட்டர்ல இல்லனா முடிஞ்சிருக்குமா சொல்லுங்க பார்ப்போம்?

நம்ம ஊர்பக்கம் டவுன் பஸ் நிறையவரும்.. அதுக்கு பக்கத்திலையே போயும்  ஒரு தடவ கூட மாட்டிக்காம ஸ்கூட்டிய லாவகமா ஓட்டின திமிர ட்விட்டர் அடக்கிருச்சுங்க.. என்னன்னு கேட்கறீங்களா? டைம்லைன் ல துப்புவங்க பாருங்க.. அடடடா.. சிலசமயம் யாருக்குமே மென்ஷன் போடாம ஒரு த்தூ - என்ன தான் நம்மமேலயே தெறிச்சாலும்நாம எதுக்கு நமக்குன்னு நினைக்கணும்?? தொடச்சுவிட்டுட்டு தொடர்ந்து கடமைய செய்யோணுமுங்க..

அப்புறம், காதல்ல தோல்வி அடைஞ்சவங்க எல்லாம் தற்கொலை செய்யறது ஓல்ட் பாஷன்.. ட்விட்டர்ல சேர்ந்து பொலம்பி பொலம்பி பூரா பேரையும் சாவடிக்கணும். அதான்ங்க லேட்டஸ்ட்டு!! 

உங்களுக்கு இந்த கவித புடிக்கும்ன்னு வைங்க - நீங்க இருக்க வேண்டிய இடம் ட்விட்டரே தான். எத்தன அடிச்சாலும் தாங்குறவங்க நம்ம கீச்சர்கள்.
காதலி  - மழை - காதல் - வானவில் - நிலா இப்டி நாலு பெரிய பெரிய தமிழ் வார்தைகள இடம் மாத்தி மாத்தி போட்டு பழகிக்கலாம்..

காரசார விவாதம் நடக்கும் பாருங்க? அப்டியே கண்ல தண்ணியே வந்துரும்.- அப்டிதான் ஒரு முறை தமிழ் ஈழம் பத்தி ஆளாளுக்கு கீச்சி தள்ளினாங்க. நமக்கு எங்க அந்த எழவெல்லாம் புரியுது? சரிதான்ன்னு அப்போதைக்கு லாக்ஆப் பண்ணிட்டு ஒரு ரெண்டே மணிநேரத்துக்கு பிறகு திரும்ப ட்விட்டர்க்கு போனேனுங்க - அப்பவும் கொலைவெறியோட தான் இருந்தாங்க.. என்ன? அனிருத் - ஆண்ட்ரியா போட்டோ ரிலீஸ் ஆனதுல ட்விட்டர்ல ஈழம் படத்த தூக்கிட்டு தமிழ்-ஈரம்‘ போட்டுட்டாங்க.

ம்ம்.. சொல்ல மறந்துட்டேனே? பாரதி ரொம்ப துரதிர்ஷ்டசாலிங்க. பின்ன? பல புதுமை பெண்கள பார்க்காமலே போய் சேர்ந்துட்டான்! சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா.. சாத்திரம் எதுக்கடி? ..இது பார் கன்னத்து முத்தம் ஒன்று- சேச்சே என்ன சிறுபிள்ளை தனமா ஒரு முத்தத்தை போய் சுத்தி வளைச்சு சொல்லிக்கிட்டு.. வந்து எங்க பெண் ட்விட்டர்கள் சிலரை பாரீர்! அவன் கண்ட கனவை பலமடங்கு தாண்டிய புதுமை பெண்களை பாரீர்! பாரீர்!

இன்னும் உங்க மொழி ஆளுமை பட்டைதீட்டப்படனும்னா, உடனே ட்விட்டர்ல சேர்ந்துடுங்க சொல்லிட்டேன். கம்பனும், வள்ளுவனும் எந்த காலத்திலும் ஒரு நாலு கெட்ட வார்த்தை உருப்படியா சொல்லித்தரப்போறதில்ல !!

அட.. இவ்ளோ பேசுற நானும்  ரௌடி தாங்க. பிரபலம்தாங்க. வாழ்க்கை - வெற்றி/தோல்வி இத பத்தியெல்லாம் நிறைய தத்துவம் போட்ருகேனுங்க. தவிர DM ல எக்கசக்க பேருக்கு இனாமா அட்வைஸ் பண்ணியிருக்கேன். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்றாங்க. அப்புறம் இந்த விகடன் - குங்குமம் இதுல கூட என்  ட்வீட்ஸ் 8 வந்திருக்கு. (இது சம்பந்தமா வந்து குவிந்த வாசகர் கடிதங்கள இங்கே இணைக்கல.. ஏன்னா பாருங்க அடுத்தவங்க என்னை புகழ்ந்தா கூச்சமாயிடுது! )

சந்துல(ட்விட்டர்ல) சின்ன அம்மணியையும், பிரபல அண்ணனையும் வம்புக்கு இழுக்காமல் நீயெல்லாம் ஒரு பிரபலமா ன்றீங்களா? -- இன்னொன்னும் இருக்குங்க!! ஓண்ணு நம்மள யாராவது ப்ளாக் (Black இல்லீங்க Block) பண்ணனும். இல்ல நாம யாரையாவது ப்ளாக்  பண்ணி விட்றோனும்.. அவங்க 10 பேர்கிட்ட இன்னார் தன்னை ப்ளாக் பண்ணிட்டாங்கன்னு பெருமையா(?) புலம்புவாங்க, அந்த பத்து பேரும் உடனே நம்மள பின்தொடர்வாங்க..

அப்டியே சகட்டு மேனிக்கு ப்ளாக் பண்ணோம்ன்னு வைங்க - நீங்களும் பிரபலம் தான்! # (இந்த டிப்ஸ் இலவசம்)

நானும் என்னைய யாராவது ப்ளாக் பண்ணுவாங்கன்னு பொறுத்து பொறுத்து பார்த்து யாரும் வரன்னவுடனே என்னையே ப்ளாக் பண்ணிகிட்டேன்! என்ன கொடும பார்த்தீங்களா? ஆனா அத சொல்லணும்ன்னு தான் திரும்ப வரவேண்டியதா போச்சு !எனக்கு ரொம்ப பிடிச்ச ட்வீட் - இந்த நிமிஷம் ட்விட்டர்ல இல்லனா என்ன செய்வீங்களோ, அது தான் உங்க வாழ்க்கை! (நன்றி - @indianHood )

ஹமாம் சோப்பு பஜ்ஜி சாப்பிட எப்டி உதவியா இருக்கோ, அதே அளவு ட்விட்டரும் வாழ்க்கை பாடம் கத்துக்க உதவியா இருக்குமுங்க!

எங்க கிளம்பிடீங்க? ட்விட்டர் அக்கௌன்ட் ஆரம்பிக்கதானே? விதி வலியது, இல்லீங்களா?? !!

33 comments:

 1. Very humorous ... and well written... please ensure you share this link to all your followers :-) @sweetsudha1

  ReplyDelete
 2. ட்விட்டர் பத்தி எதுவுமே தெரியாம இருந்த எனக்கு அதோட அருமை பெருமை(?)களை எடுத்துரைத்த யமுனா வாழ்க. மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 3. செம நையாண்டி //பை தி வே ரொம்ப பெரிசா எழுதியிருக்கீங்க // ரணகளம்

  ReplyDelete
 4. ரசித்து படித்து மகிழ்ந்தேன் :-))))
  வாழ்த்துகள்!

  amas32

  ReplyDelete
 5. எனக்கு கூட நைஸ்தானுங்கோவ்

  ReplyDelete
 6. என்னை போன்ற எளியவர்களுக்கு த்விட்டேரை சரியாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி :)

  ReplyDelete
 7. அப்ப நீங்க ஃபேக் ஐடி இல்லையா?

  ReplyDelete
 8. என்ன ஒரு எதார்த்தம்.. உங்கள நீங்களே பிளாக்கிட்டீங்களா? அவ்வ்வ்வ்... :-)

  ReplyDelete
 9. கலக்கல் யமுனா

  ReplyDelete
 10. ஹா ஹா, ஸூபர்! நானும் சுரேஷ் பேரப்பாத்து கொல்ம்பிட்டேன். :-) ஏதாச்சும் டீ, வட வரும்னு நெனச்சேன். :-) இட்ஸ் ஓகே!

  ReplyDelete
 11. அட யமுனா.. செம.. என்ன ஒரு நடை... அவேசம்.. அருமை.. கலக்கல்.. (இன்னும் ஒரு 4-5 வார்த்தை சேர்த்துக்கோங்க அவசரத்துக்கு தோன மாட்டேந்து) ...
  // காதல்ல தோல்வி அடைஞ்சவங்க எல்லாம் தற்கொலை செய்யறது எல்லாம் ஓல்ட் பாஷன்.. ட்விட்டர்ல சேர்ந்து பொலம்பி பொலம்பி பூரா பேரையும் சாவடிக்கணும். அதான்ங்க லேட்டஸ்ட்டு!!//
  // # (இந்த டிப்ஸ் இலவசம்)//

  மிகவும் ரசித்தேன்..!! :)

  -லாஓசி என்கிற சந்து

  ReplyDelete
 12. உங்களை நீங்களே ப்ளாக்கி மீண்டு(ம்) வந்திருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்..
  நல்வரவு...இதுவும் ஒருவகை விடாது கருப்புதான்:‍-))

  ReplyDelete
 13. இப்பதான் 10 நாளாச்சி ட்வீட்டர்ல இணைஞ்சு.. கண்ணக்கட்டுது. பொறுமையா காத்திருப்போம்னு காத்திருக்கேன். உங்க பதிவு கொஞ்சம் தெம்பு தருது.. பாக்கலாம்.

  ReplyDelete
 14. அந்தப் பக்கமே (அதிகம்) போவதில்லை...

  ReplyDelete
 15. ரொம்ப தெள்ள தெளிவ இயல்புகளை கோர்வையாக பதிவு செய்து உள்ளீர்கள்...சகோ...வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 16. அப்புறம், காதல்ல தோல்வி அடைஞ்சவங்க எல்லாம் தற்கொலை செய்யறது ஓல்ட் பாஷன்.. ட்விட்டர்ல சேர்ந்து பொலம்பி பொலம்பி பூரா பேரையும் சாவடிக்கணும். அதான்ங்க லேட்டஸ்ட்டு!!

  ஹா ஹா அருமையான பதிவு -வாழ்க ட்விட்டர்

  ReplyDelete
 17. ஹா ஹா அருமையான பதிவு -வாழ்க ட்விட்டர்

  ReplyDelete
 18. இயல்பான நடை ...லேசாய் தூவப்பட்டிருக்கு -கேலியும் ,கிண்டலும் #நல்லாயிருக்கு ...நல்லாதான் இருக்கும் @SEKARANS

  ReplyDelete
 19. நீங்களாவது என்னை பிரபல ட்விட்டர்னு ஒத்துக்கிட்டிங்களே #நன்றி

  ReplyDelete
 20. பதிவு சுவாரஸ்யமா இருக்குனா, அதுக்கு காரணம் என் சக ட்விட்டர்கள் தான். :-)

  அதுக்காகவும், கமென்ட்டியதுக்கும் சேர்த்து ஆயிரம் நன்றிகள்.. நன்றி, நண்பர்களே!

  ReplyDelete
 21. >>கொஞ்சம் ட்வீட், கொஞ்சம் சமையல்ன்னு மாத்தி மாத்தி பண்ணினதுல 60+ வயதான மாமனாரும், மாமியாரும் அவங்க ஆயுசுல சாப்பிட்டேயிருக்காத எலுமிச்சம் பழம் பிழிஞ்ச சாம்பாரையும், சௌசௌ ரசத்தையும் பண்ண முடிஞ்சுதே??  ஆத்துக்காரர் பாவம்! அவருக்கு என் அனுதாபத்தை சொல்லவும் ;-0

  ReplyDelete
 22. >>Your comment will be visible after approval.


  பிரபல பதிவரா? இல்லையா?ன்னு கண்டு பிடிக்க ஒரு குறுக்கு வழி கமெண்ட் போட்டதும் உடனே பப்ளிஷ் ஆகுதா? இல்லையா ? என்பதே . உடனே பப்ளிஸ் ஆனா அவர் பிரபல பதிவர் இல்லை ஹி ஹி

  ReplyDelete
 23. Nicely written.. A good dose of humour. /அப்புறம், காதல்ல தோல்வி அடைஞ்சவங்க எல்லாம் தற்கொலை செய்யறது ஓல்ட் பாஷன்.. ட்விட்டர்ல சேர்ந்து பொலம்பி பொலம்பி பூரா பேரையும் சாவடிக்கணும். அதான்ங்க லேட்டஸ்ட்டு/- sema! @nandhiniramk

  ReplyDelete
 24. யமுனா சாவடிக்கணும்.

  ReplyDelete
 25. அருமைங்க சகோ.....இவ்வளவு நக்கல் நையாண்டி உங்க கிட்டு இருந்து எதிர்ப்பார்க்கவில்லை, பிரமாதம் நிறையா எழுதுங்க....அப்பறோம் அந்த புது வகை உணவு அடடடா, காதல் தோல்வி அப்பப்பப்பா, கிளைமாக்ஸ் அற்புதம்.

  ReplyDelete
 26. அருமைங்க boss. wonderful to read. கிளைமாக்ஸ் அற்புதம்.

  Thanks,
  M. Selvam
  My interests: Writing, reading socialmedia news, marketing

  My interest based network sozialpapier profile: http://sozialpapier.com/index.php/profile/info?id=dea2713273538bae24e012530d3c36aefc

  ReplyDelete
 27. பதிவு அருமை,ஆனால் உங்கள் பதிவில் குறிப்பிட்ட எந்த ஒரு சமாச்சாரத்திலும் அடங்காமல் தனித்தன்மையுடன்(!) டிவிட்டரில் உலாவும் என்னைப் பற்றி எதுவும் எழுதாமல் விட்டதற்கு எனது மென்மையான கண்டனங்கள்!! - @GaneshVasanth.

  ReplyDelete
 28. இயல்பாக உங்களுக்குள் ஒரு நகைசுவை உணர்வு உள்ளது சூழ்நிலைகள் அதை சிதறடிக்காமல் பார்த்துகொள்ளுங்கள் மிகவும் உயர்ந்த பொக்கிஷம் அது.

  ReplyDelete