Thursday, 21 February 2013

ட்விட்டரில் நகைச்சுவை..

140 எழுத்துக்குள் சொல்லவந்ததை சொல்லிவிட வேண்டும் என்பதே
ட்விட்டரின் வசீகரம். அதிலும், உங்களுக்கு சுஜாதா பிடிக்குமாயின், ட்விட்டர் உங்களை அடிமைப்படுத்தும் அபாயம் அதிகம்.

வாழ்வியல் தத்து(பித்து)வங்கள், குழந்தை/அம்மா செண்டிமெண்ட், நட்பு - காதல் என்று கலந்தும் கட்டியுமாக ட்வீட்டியிருக்கிறேன். ஆனால், இவற்றில் என் நகைச்சுவை கீச்சுக்கள் தான் அதிகம் கண்டுக்கொள்ளப்படவில்லை. இது குறித்த வருத்தம் எனக்கு எப்போதுமுண்டு..

சாம்பிளுக்கு சில - புரிகிறதா பாருங்கள்.
 • 'உங்க லெக்சரர் பேர் என்ன?', 'இன்னும் வைக்கல!' # கல்லூரி நினைவுகள் 
 • எதிர் வீட்டுக்காரர் இன்று தைரியமாக, 'நாய்கள் ஜாக்கிரதை' போர்டு மாட்டி விட்டார் # வளர்ப்பது ஒன்று தான்.
 • நரகத்திலும் சில வசதிகள் இருந்து தான் தீர வேண்டும். நானும் ராஜபக்ஷேவும் அப்படி ஒன்றும் சமமாக தோன்றவில்லை! 
 • கடவுளே, எனக்கு கொஞ்சம் பொறுமையை கொடு! அதுவும், உடனடியா.
 • மித மிஞ்சிய கோவம் வந்தால், கவிதை எல்லாம் எழுதுவதில்லை. சமைப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்! ;-)
 • சுத்தம் செய்வதென்று ஆரம்பித்தால் மனதிலிருந்து தான் தொடங்க வேண்டும்.. பேசாமல் அடுத்த வீட்டு குப்பையை கவனிப்போம். 
 • என் வீட்டில் சிதம்பரம் தான்! - இதை சொல்ல அவருக்கு எல்லா அனுமதியும் தந்திருக்கிறேன்.
 • த்ரிஷா-அனுஷ்கா-தமன்னா இவர்களில் யார் பேச்சை கேட்பதென்று உடனே தீர்மானித்தாக வேண்டும்! # தீபாவளி ஷாப்பிங் !!
 • நான் கட்டிலுக்கு கீழ ஒளிஞ்சுக்கறேன். தேடறியாம்மா ?

இதில், 'நாய்கள் ஜாக்கிரதை' கீச்சு மட்டும் ஆனந்த விகடனில் வெளியாகி, மோட்சம் பெற்றுவிட்டது. மற்றவை, அத்தகைய பிறவி பயனை அடையாவிட்டாலும், குறைந்தபட்ச புன்னகையை கூட யாருக்கும் தருவிக்கவில்லை. ஹாஸ்ய கீச்சுக்களுக்கு #JokeOnly போடவேண்டியிருந்ததெல்லாம், அமீபா வரைந்து நாலாபக்கத்திலும் பேர் எழுதுவதற்கு ஒப்பான துயரம்!

நகைச்சுவை உணர்வு யாருக்கு குறைந்து வருகிறது? மற்ற தமிழ் கீச்சர்களுக்கா, எனக்கா என்று குழப்பமாய் இருந்தது.. எப்பவும் போல எனக்கு சௌகர்யமான பதிலை எடுத்துக்கொண்டேன்.23 comments:

 1. அனைத்தும் மிக அருமையாகதான் உள்ளது...ரசித்தேன்..சிரித்தேன் பாராட்டுக்கள்....தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 2. உங்கள் டிவிட்டர் ஐடியை அனுப்புங்கள் நான் தொடர்கிறேன்

  ReplyDelete
 3. பாருங்க, உங்கள போல நாலு நல்லவங்களால தான் அப்பப்போவாவது கரண்ட் வருது.

  மிக்க நன்றி. இது என் ஐடி - https://twitter.com/yamunaS_

  ReplyDelete
 4. இது போன்ற கீச்சுக்கள் மறுகீச்சு செய்யப்படாமல் போனால்.. கடவுளிடம் பொறுமையை கேளுங்கள் உடனடியா... :)) நல்ல பதிவு.. :)

  ஒரு வேலை ராஸ்கோலு, கனல் போன்ற நகைச்சுவை கீச்சர்கள் கீச்சை பார்த்து பார்த்து நம்ம கீச்சர்களோட நகைச்சுவை உணர்வின் தரம் வேறு பக்கமா உயர்ந்துருச்சோ?

  அப்புறம் இந்த அமீபா எடுத்துக்காட்டு உங்க பழைய பதிவு எதுலையோ பார்த்த ஞாபகம்.. செக் பண்ணுங்க.. :)


  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு நன்றி சகோ..

   //அமீபா எடுத்துக்காட்டு உங்க பழைய பதிவு எதுலையோ பார்த்த ஞாபகம் // - நீங்க சாதா சக்தியா? ஞாபக'சக்தி' யா? :-))

   Delete
 5. அருமையான கீச்சுக்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 6. அனைத்தும் அருமை..
  கலக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ், நன்றி சக்தி :-)

   Delete
 7. எல்லாரும் தூங்கிட்டு இருக்கும்போது ட்வீட் போடக்கூடாது ;-) எப்படி ட்வீட்டறோம் என்பதை விட எப்போ ட்வீட்டறோம் என்பதே முக்கியம், நம்ம ஃபிரண்ட்ஸ் இருக்கும்போது ட்வீட்டுனா அவங்க ஆர் டி பார்த்து எல்லாரும் ஆர் டி பண்ணுவாங்க

  ReplyDelete
  Replies
  1. சாரே, நான் சொல்ல வந்தது நகைச்சுவை கீச்சுக்கள் மட்டும் மற்ற கீச்சுக்கள் அளவுக்கு reach ஆகரதில்ல..

   'வாழ்க்கை என்பது...' ன்னு ஆரம்பிச்சேன்னா படிக்காமையே கூட RT பண்ணிடுவாங்க :-)

   Delete
 8. >>> Your comment will be visible after approval.

  பிரபல ட் வீட்டர்னா ஹி ஹி

  ReplyDelete
 9. குதூகலித்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. சந்தோஷம்..

   வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி இளா :-)

   Delete
 10. அவ்வ்வ்வ்! ப்ளாக்லயும், ஃபேஸ்புக்லயும் எழுத முடியற என்னால ட்வீட் எழுத முடியலையேன்னு ஏற்கனவே வருத்தம். இப்ப உங்களோட அருமையான ஹாஸ்யம் கலந்த ட்வீட்களைப் படிச்சதும் இன்னும் அதிகமாயிட்டுது. ட்விட்டர்ல என் ப்ளாக் பதிவுகளை மட்டுமே ஷேர் பண்ணிட்டிருக்கேன். அந்தப் பக்கம் போய் படிக்கறதே இல்லங்க யமுனா. அது தப்புன்னுதோணுது. உங்களுக்காகவே இனி ட்விட்டர்லயும் சுத்தப் போறேன் நான்.

  ReplyDelete
 11. நிறைய ட்வீட்ஸ் நன்று..பெஸ்ட் கட்டிலுக்கு கீழே ஒளிவது :)

  @rasanai

  ReplyDelete
 12. Hi Yamuna/Vignasuresh,

  Hope you missed this one. "Indru en magal solli asathiyathu.
  I hate idli but my hungry took h so i ate idli".

  all the tweets are good. parattai thatti selkirathu.

  Mahe

  ReplyDelete
  Replies
  1. நன்றி மஹி.. இன்னும் நிறைய ஹாஸ்ய கீச்சுக்கள் இருக்கின்றன. அடுத்த பாகமாக பதிவேற்றிட நினைத்திருக்கிறேன் :-)

   Delete
 13. எல்லாமே நல்லாத்தான் இருக்கு, இதுல பல ட்வீட்டு RTயும் ஆனாதா ஞாபகம், ஆனா இவ்வளவு நாளா டிவிட்டர்ல இருந்து நீங்க புரிஞ்சிக்காத விசயம் ஒன்னு இருக்கு, உங்களுக்குன்னு ஒரு நட்பு வட்டம் இல்லன்னா எவ்ளோ நல்ல ட்வீட்டும் கண்டுக்காம போகுறதுக்கு இங்க வாய்ப்பு அதிகம், டிவிட்டரும் வாழ்க்கை மாதிரிதாங்க :-)
  --- The Genius @GaneshVasanth

  ReplyDelete
  Replies
  1. // உங்களுக்குன்னு ஒரு நட்பு வட்டம் இல்லன்னா எவ்ளோ நல்ல ட்வீட்டும் கண்டுக்காம போகுறதுக்கு இங்க வாய்ப்பு அதிகம், டிவிட்டரும் வாழ்க்கை மாதிரிதாங்க// -- இதுவே ஒரு தத்ஸ் ட்வீட் நண்பா

   Delete
 14. உங்கள் விஷப்பரிட்சையைப் பார்த்து கவரப்பட்டு இங்கே வந்தேன் .எனக்கும் நகைச்சுவை பிடித்தசுவை ,வாழ்த்துக்கள் . வாழ்த்த வயது எனக்கு இருக்கிறது!

  ReplyDelete