Friday, 19 July 2013

குடும்பம் என்பது யாதெனின்..


நீண்ட நாட்களுக்கு பிறகு என் பால்ய சினேகிதியை சந்தித்தேன். நிறைய காரணங்களில் ஒன்றாக, ரசனைகள் ஒத்து வரவில்லை என்பதால் கணவரை பிரிந்து விட்டதாக சொன்னாள். ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ஒத்த ரசனையும், திருமணமும்?? அப்படி யோசிக்க ஆரம்பித்தால் நானும், என் கணவரும் தான் உலகின் மிகச்சிறந்த மிஸ்-மாட்ச் ஜோடியாய் இருப்போம்.முற்றிலும் மாறுபட்ட பிடித்தங்களை உடைய எங்கள் கதையை கேளுங்கள் -


என் கணவருக்கு, இந்தக் கார்கள், அதன் மாடல்கள், எஞ்சின்கள் பற்றின யாவும் அத்துப்படி. பயணங்களில் என்னிடம், ஒரே செக்கில் ஒன்பது காரை வாங்க வந்திருக்கும் வாடிக்கையாளரை பார்த்து விட்ட விற்பனை பிரதிநிதி போல, கார்களை பற்றி விளக்குவார்  (அப்போது மட்டும், என்னிடமிருந்து ‘ம்’ மட்டும் வரும் என்பது அவருக்கு கூடுதல் ஸ்வாரஸ்யம்)

இவ்வாறாக போகும் எங்கள் உரையாடல் -

’அது தான் ரெனால்ட் DUSTER..’
’ஒ!’

’ ERTIGA வ விட 5 இன்ச் தான் கம்மி, ஆனா 5 ஸீட்டர். அதனால லெக் ஸ்பெஸ் அதிகம்..'
'ம்.'

'5.2m turning radius'.
'ம்’

'மைலேஜ் எவ்ளோ தருதுன்னா..  '
(மனதிற்குள் -நீங்க டஸ்டர்னதும் நியாபகம் வந்தது) 'ஒரு சூப்பர் மார்கெட்ல நிறுத்துங்க, விளக்குமாறு வாங்கனும்..'
---------------------
அவர் உலகத்தில் மொத்தமே கறுப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை, நீலம் எனபதாக ஆறு, ஏழு வண்ணங்கள் தான். நமக்கு அப்டியா?

'இந்த புடவை நல்லா இருக்காப்பா?'
'இதே கலர் தான் ஏற்கனவே வச்சிருக்கீயே?'
'அது ஆஃப் வொயிட், இது க்ரீம்.. வேற, வேற.'
 ங்கே..

இன்னும் காப்பர் ஸல்பேட் ப்ளூ, ராயல் ப்ளூ, ஆலிவ் க்ரீன், பிஸ்தா க்ரீன், செர்ரி ரெட் இம்மாதிரியான வண்ணங்களின் பெயர்கள் அடங்கிய அத்யாவசிய தகவல்கள் தெரியாமல், எப்படி தான் வளர்ந்தாரோ என பாவமாக இருக்கிறது.
------------------------
ஒரு கல்யாணத்துக்கு போய் வந்தோம்.
‘அமெரிக்கால இருந்தானே ரகுராமன் மாமாவோட பையன், வந்திருந்தான் பார்த்தியா?’
‘யாரு, மஞ்சள் அனார்கலி போட்ட பொண்ணு பின்னாடியே சுத்தி சுத்தி வந்தானே அவனா?’
‘அது தெரியாது, Canon Eos 650d slr மாட்டியிருந்தானே?’
’ப்ச், Blue Jeans - Bottle green குர்த்தி, அவன் தானே?’
' iPhone 5 வச்சிருந்தானேமா.’
’ம்? நாதஸ்வர வித்வான் போல, எல்லா விரல்லயும் மோதரம் போட்டிருந்தானே, அவன தான் சொல்றீங்க?’
.
.
ஆக, அது ரகுராமன் மாமா பையனே தான் என்று, எதோ ஒரு வாக்கியத்தில் முடிவுக்கு வந்து விடுகிறோம்.
------------
அவருக்கு சுஜாதா பெயர் தெரியும். மற்றபடி, நான் லைப்ரரியில் இருந்து எடுத்து வரும் சு.ரா, அசோகமித்ரன், நாஞ்சில், தி.ஜா - இவர்களோடு அவருக்கு ஸ்நானப்ராப்தி கூட இல்லை.. என்றாவது ஒரு நாள், ‘ஜெயமோகன் யாரு, உன் ஒன்பதாங்கிளாஸ் ஹிஸ்ட்ரி வாத்யாரா?’ என்றுகூட அவர் கேட்கலாம்.. ஆனால், தலைவர் உருட்டி உருட்டி படிக்கும் எகனாமிக் டைம்ஸ், எனக்கு மாவு சலிக்க மட்டுமே உபயோகமாயிருக்கிறது.

எனக்கும் கிரிக்கெட் பார்க்க பிடிக்கும். அதாவது அது டெஸ்ட் அல்லாமல், ஒன்-டே அல்லது 20-20யாக இருந்து, அதுவும் லைவ் மேட்ச்’சானால், அதிலும் இந்தியா ஆடினால் பார்ப்பேன். தலைவர், எப்போதோ யாரோ விளையாடி, ஹர்ஷா போக்ளே வழுக்கை தலையோடு விமர்சனம் செய்யும் ஆதி கால மாட்சை கூட கண்சிமிட்டாமல் பார்த்து, என் பொறுமையை சோதிப்பார்... ‘18ஆவது ஓவர்ல காம்ப்ளி ஒரு ஸ்ட்ரெயிட் கட் அடிப்பான், பாரேன்..’ (எனக்கு தெரிந்த ஸ்ட்ரெயிட் கட்’டை பார்லரில் தான் பண்ணிவிடுவார்கள்)

ஹோட்டலுக்கு போனால், ஆனியன் ரவா தோசை ஆர்டர் செய்வதற்கு எதற்கு மெனு கார்ட் கேட்கிறார் என்றே ஒவ்வோரு முறையும் அலுத்துக்கொள்கிறேன். (நான், வாயில் நுழையாத பெயரை கண்டுபிடித்து ஆர்டர் செய்தால், வரும் வஸ்து பெரும்பாலும் வாயில் வைக்க வழங்காது. அப்போது, ரவா தோசையையே நான் திரும்ப திரும்ப சாப்பிட வேண்டி இருக்கிறதல்லவா?)

உன்னிகிருஷ்ணனின் ’மனவ்யாள...’வில் மெய் மறந்து லயித்திருந்தால், ‘கர்னாடக சங்கீதத்துக்கு கம்பீரமான ஆண் குரல் தான் எடுபடும்!’ என்று ஒரே வரியில் தாண்டி போய்விடுகிறார். அவருக்கு பிடித்த சாதனா, எனக்கு அத்தனை சொர்கமாக இல்லை.

எவ்வளவு பிரயத்தனப்பட்டு கவனித்தாலும், அவர் சொல்லும் ஆன் லைன்/இன்வெஸ்ட்மெண்ட் பாங்கிங் சமாச்சாரம், எனக்கு 10 நிமிஷத்தில் தூக்கத்தை தருவிக்கிறது..

ஆக, இந்த பத்து வருடத்தில் எங்கள் இருவருக்கும் பொது பிடித்தமாக இருப்பது குழந்தைகளும், இன்னும் ஒன்றிரண்டு விஷயங்களும் மட்டுமே..

யார் கண்டது? ஒரு வேளை ஒத்த ரசனை கொண்டிருந்தோமேயானால், சீக்கிரமே போர் அடித்திருக்கலாம். அவர் பிடித்தங்களை நானும், என்னை அவரும் கேலி செய்யாமலில்லை. ஆயினும், இது வரை எங்கள் ரசனைகளை மாற்றிக்கொள்ள அவசியப்படவுமில்லை..

நம்புங்கள், கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய ப்ரியமும் இருந்தால், திருமணம் என்பது ஒன்றும் அத்தனை கஷ்டமாக இல்லை  :-)
53 comments:

 1. நகைச்சுவையாக ஒரு நல்ல கருத்து பகிர்வு மிகவும் ரசித்து படித்தேன்

  ReplyDelete
 2. //ஹோட்டலுக்கு போனால், ஆனியன் ரவா தோசை ஆர்டர் செய்வதற்கு எதற்கு மெனு கார்ட் கேட்கிறார் என்றே ஒவ்வோரு முறையும் அலுத்துக்கொள்கிறேன். (நான், வாயில் நுழையாத பெயரை கண்டுபிடித்து ஆர்டர் செய்தால், வரும் வஸ்து பெரும்பாலும் வாயில் வைக்க வழங்காது. அப்போது, ரவா தோசை என் வசம் அல்லவா?)///

  இது நானும் என் மனைவியும் ஹோட்டலுக்கு போனால் நடப்பதும் இதுவே... இது எங்கள் பழக்க வழக்கத்தை பார்த்து நீங்கள் எழுதியதா அல்லது எல்லா மனைவிகளும் இப்படிதான் வாய்யில் நுழையாததை ஆர்டர் செய்வார்களா?

  ReplyDelete
  Replies
  1. சாரே, எல்லா மனைவிகளும் ஒரே மாதிரி தான். அதாவது, நீங்க எதிர்பார்க்காத மாதிரி :-)

   Delete
 3. மிகமிகச் சரி யமுனா. ஒத்த துருவங்களை விட எதிர் துருவங்களில்தான் ஈர்ப்பு சக்தி அதிகம். மாறுபட்ட ரசனைக்காக வாழ்க்கைத் துணைவியை கேலி செய்யும் போதும்/செய்யப்படும் போதும் புன்னகைக்க கறறுக் கொண்டு விட்டால் மட்டும் போதும்.... வாழ்ககை சோலைவனம்தான்!

  கலர்ல இத்தனை வெரைட்டி இருக்கா... இப்பத்தான் தெரியுது எனக்கு. (நம்ம வூட்டுக்காரர் மாதிரி இன்னொரு அப்பாவின்னு நெனக்கறீங்கதானே!) ஹி... ஹி...! புத்தகம் படிக்கிற விஷயத்துல என்னைப் போல ஒருத்தின்னு உங்களைச் சொல்லத் தோணுது எனக்கு!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கணேஷ் சார். :-)

   Delete
 4. நல்ல பதிவு. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 5. ம்ம்.. வழக்கம் போல நல்லாருக்கு!! :-) ரெண்டாவது பாரால பயணங்களிலுக்கு அடுத்து என்னிடம்னு ஒரு வார்த்த சேத்துக்கலாங்கிறது என்னோட எண்ணம் ( ரெண்டு தடவ படிக்கவேண்டியதா போச்சு).
  அங்கங்க சுஜாதா ஞாபகம் வர்றார், செம ஜாலியானா பதிவு, எனக்கு விஜய் ரசிகை மனைவியா வந்தா அத எப்பிடியாச்சும் சமாளிக்கனும்கிற தைரியம் வந்திடுச்சு :-)
  பின் குறிப்பு - உங்க வயசு கிட்டத்தட்ட தெரிஞ்சு போச்சு :-D --- @GaneshVasanth

  ReplyDelete
  Replies
  1. நான் என்ன சினிமா நடிகையா? என் வயது தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க? :-)

   உங்களுக்கு பவர் ஸ்டார் ரசிகை மனைவியா வர வாழ்த்துகள்!!

   Delete
 6. எதிர் எதிர் துருவங்கள் தான் அதிக இர்ப்பு கொள்கிறது

  ReplyDelete
  Replies
  1. ம் ம்.. இப்டி எதாவது சொல்லி மனச தேத்திக வேண்டியது தான் ;-)

   Delete
 7. நல்ல பதிவு. உங்க கணவருக்கான மறைமுக எச்சரிக்கையாவும் பார்க்குறேன். (சும்மா) :) சுவாரஸியமா இருந்தது.

  ReplyDelete
 8. அட! என்னோட replica! ஒரே வித்தியாசம் திருமணம் ஆகி 38 வருடங்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஒரு பதிவோட வெற்றி, அட இது நம்ம கதை’ன்னு யாருக்காவது தோன்றது தான். ஸ்பெஷல் நன்றிம்மா.. :-)

   Delete
 9. ஏற்கனவே நிறைய பேர் சொன்ன விடயங்கள்தான் என்றாலும், உங்கள் மொழியில் ஏதோ ஒரு புது சுவாரசியம் ஒட்டிக்குது.
  நல்லா எழுதுறீங்க.
  முதல் பாராவுக்கு அருகில் உள்ள படம் சரியா விழுகல... அதை மட்டும் சரி பண்ணிடுங்க.
  அவ்ளோதான்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி, தமிழ் :-)

   Delete
 10. ராஜன்20 July 2013 at 05:48

  ஏறக்குறைய என்னுடைய வாழ்க்கை,

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.. ஒரே அலைவரிசை,ஒரெ ரசனை இதெல்லாம் சினிமால தான். யதார்த்தம் தான் ஸ்வாரஸ்யம் :-)
   பின்னூட்டத்துக்கு நன்றி :-)

   Delete
 11. எளிய வார்த்தைகளில் அருமையான பதிவு எனக்கும் என் மனைவிக்கும் கூட அப்படித்தான் என்னைப்பொருத்தவரை ஒத்தரசனை என்பது சொத்தை ரசனையாகவே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. நன்றி, மன்னாரு சார் :-))

   Delete
 12. கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய ப்ரியமும் இருந்தால், திருமணம் என்பது ஒன்றும் அத்தனை கஷ்டமாக இல்லை

  Super message yamuna..

  ReplyDelete
 13. ஐயையோ ... இது நான் எழுத வேண்டிய பதிவு !! நீங்க எழுதிட்டீங்க யம்மு :-)
  hilarious ...
  <>
  இந்த வாக்கியம் அட்சர சுத்தம் நிஜம் :-) @sweetsudha1

  ReplyDelete
  Replies
  1. சுதா, நன்றி, நன்றி :-))

   Delete
 14. ஆஹ்ஹா என்ன ஒரு நகைச்சுவை சொல்லாடல். எல்லாமே என்னை கவர்ந்தன. குறிப்பாக "ஆனால், தலைவர் உருட்டி உருட்டி படிக்கும் எகனாமிக் டைம்ஸ், எனக்கு மாவு சலிக்க மட்டுமே உபயோகப்படுகிறது", " எப்போதோ யாரோ விளையாடி, ஹர்ஷா போக்ளே வழுக்கை தலையோடு விமர்சனம் செய்யும் ஆதி கால மாட்சை கூட கண்சிமிட்டாமல் பார்த்து,". வீடே ஒரு உலகம். அதையும் கவனித்துக்கொண்டு, வெளி உலகத்தில் நடப்பவற்றையும் உன்னிப்பா கவனித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். you are great. simply superb. என் முப்பாட்டனார் சொல்லுவார், எல்லாவற்றிலும் ஒத்த கருத்துகளை கொண்ட தம்பதிகளின் திருமண பந்தம் 12 வருடங்கள்தானாம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க :-)

   முப்பாட்டனார் சொல்லுவார்???? :-))

   Delete
 15. good write up and excellent theme :))

  ReplyDelete
 16. முகநூலில் எனது பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறேன்.
  வாழ்த்துக்கள் யமுனா!

  ReplyDelete
 17. //ஆனால், தலைவர் உருட்டி உருட்டி படிக்கும் எகனாமிக் டைம்ஸ், எனக்கு மாவு சலிக்க மட்டுமே உபயோகப்படுகிறது.//

  //கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய ப்ரியமும் இருந்தால், திருமணம் என்பது ஒன்றும் அத்தனை கஷ்டமாக இல்லை :-)//

  நல்ல கட்டுரை..... பிடித்தது.....

  பல விஷயங்களில் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்துப் போய்விட்டால் பிரச்சனையே இல்லை.... நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளணும் என எண்ணும்போது தான் கஷ்டம்.....

  ReplyDelete
 18. மார்ஸுக்கும் வீனஸுக்கும் வேறுபாடுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் வாழ்க்கை இனிக்க அந்த வேறுபாடுகளை மீறி வரும் சிற்சில ஒற்றுமைகள்தான் காரணமாக இஎருக்கின்றன!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், குழந்தைகள் போல பொது பிடித்தம் இருக்கும் வரை :-)

   Delete
 19. என்றாவது ஒரு நாள், ‘ஜெயமோகன் யாரு, உன் ஒன்பதாங்கிளாஸ் ஹிஸ்ட்ரி வாத்யாரா?’ என்றுகூட அவர் கேட்கலாம. Rofal :):)

  ReplyDelete
 20. //ஒத்த ரசனையும், திருமணமும்?? அப்படி யோசிக்க ஆரம்பித்தால் நானும், என் கணவரும் தான் உலகின் மிகச்சிறந்த மிஸ்-மாட்ச் ஜோடியாய் இருப்போம்.முற்றிலும் மாறுபட்ட பிடித்தங்களை உடைய எங்கள் கதையை கேளுங்கள்//

  This is a normal case. Not abnormal.
  90 percent of couples are this way, in my opinion.

  But you have written well.

  ReplyDelete
 21. நம்புங்கள், கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய ப்ரியமும் இருந்தால், திருமணம் என்பது ஒன்றும் அத்தனை கஷ்டமாக இல்லை :-)

  ReplyDelete
 22. உங்க வலை தலைப்பு சொல்ற மாதிரி ரெண்டு பேருமே (ஆணும் , பெண்ணும் ) வேற வேற கிரகம் , அப்புறம் என்னஎல்லாம் 'கெரக'மாதான் இருக்கும் …கடவுளே என் வீட்டுக்காரி கண்ல இந்த பின்னூட்டம் கண்ல படக் கூடாது சாமி...

  ReplyDelete
 23. யதார்த்தத்தை அழகாக, யமுனாவின் trademark நகைச்சுவையோடு பதிவு செய்திருக்கிறீர்கள். சூப்பர். மிக ரசித்தேன். வாழ்த்துக்கள்.
  -Sudha (jananis_mom)

  ReplyDelete
 24. கல்யாணத்த நெனச்சாலே பயமாக்கீது.. ஆனா உங்க பதிவு கொஞ்சம் நம்பிக்கை தருவதா இருக்குங்க. நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. ஒரு நல்ல பதிவு கணவன் மனைவி புரிதல் எப்படி இருக்கவேண்டும் என்பதில்.....வாழ்த்துக்கள் from @rvelz

  ReplyDelete
 26. I have a different thought to this. I could write all the big explanation here. I have written it in my blog entry

  http://sreenivasan.ksshouse.com/2013/07/understanding-or-interest.html

  ReplyDelete
 27. ஒரு விஷயத்தை ஒரு சின்ன ஹாஸ்ய சுவாரசியத்தோட சொல்றதுல நான் உங்களோட தீவீர ரசிகன். நானும் அதை முயற்சி பண்றேன். எங்கிட்டு? சட்டில இருந்தா தான அகப்பைல வரும்? :-)) குடும்ப வாழ்க்கையை பத்தி வழக்கம் போல கலக்கியிருக்கீங்க.. ரசித்தேன்... வாழ்த்துகள் :-))

  ReplyDelete
 28. Very Nicely written Yamuna.. :))

  ReplyDelete
 29. வேறுபாடுகள் அனைத்தையும் நன்கு பதிவு செய்துவிட்டீர்கள்
  "நம்புங்கள், கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய ப்ரியமும் இருந்தால், திருமணம் என்பது ஒன்றும் அத்தனை கஷ்டமாக இல்லை :-)"
  'நிறைய பிரியமும்' என்பதை அடித்துச் சொல்லுங்கள்

  ReplyDelete
 30. எளிமையான கருத்துக்களை வலிமையாக சொல்லவும் திறமை வேண்டும் :-) மிக அருமை :-) தொடர்ந்து எழுதுங்கள் :-) வாழ்துக்கள் :-)

  ReplyDelete
 31. பாட்டி, அம்மா தங்கை என்ற மூன்று பெண்களிடமும் முப்பது வருஷம் பழகிய பின்புதான் என் கல்யாணம் நடந்தது. 19 வருஷத்துக்கு அப்புறம் என் தங்க மனைவி எனக்கு குடுத்த பட்டம் "உங்களுக்கு ஒண்ணுமே புரிஞ்சுக்க தெரியாது".. எதோ என் சுய சரிதையை படிக்கறாப்ல இருந்தது. நீங்கள் வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 32. /// அவருக்கு பிடித்த சாதனா, எனக்கு அத்தனை சொர்கமாக இல்லை. ///
  வாவ்... எத்தனை பேர் இந்த ஜோக்கை கவனிச்சாங்களோ!
  சரவணன்

  ReplyDelete