Wednesday, 17 February 2016

பிரேமம் மலரும் ஃபேக் ஐடியும்!


உங்கலை விரும்பறென்’ என்று ஒரு காதலர் தினத்தன்று ஃபேஸ்புக்கில் எழுத்துப்பிழையோடும் தனிச்செய்தி கிடைக்கப்பெறுகிறேன். சின்ன சுவாரஸ்யமாக அப்போது என் குழந்தைகள், கணவர் சகிதம் நிற்கும் புகைப்படமே முகப்புப்படமாயிருக்கிறது. ’பாருங்க, அந்த படத்தில் இருக்கற குழந்தைகள் என்னுது தான். அதாவது எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு’ என்று சந்தூர் மம்மி போல் வெட்கத்தோடு சொல்ல ஆரம்பிதால், ’இது காதல் இல்ல, நீங்க பயப்படவேண்டாம், ஒரு மாதிரி க்ரஷ்’ன்னு வைங்களேன். கவனிச்சிருப்பீங்களே, நீங்க எத எழுதினாலும் முதல் ஆளா லைக் போடுவேன்’ என்கிறார். எனக்கு ஏகக்கடுப்பு. தொடர்ச்சியாக ஒருவர் முதல் லைக் போடுமளவு நல்லாதான் எழுதறோமோ என்று லேசாக கர்வம் எட்டிப்பார்க்கத் துவங்கியிருந்த நேரம். ’இல்லைங்க. அதெல்லாம் வேலைக்காகாது. எனக்கு இதுக்கே நேரம் போதல’ என்றதும் நண்பர் சட்டென்று, ஏங்க அந்த ‘...’ பெண் ஐடி, உங்க தோழியா?அவங்களுக்கும் லைக் உடனே உடனே போட்டிருவேங்க என்றார். அத்துடன் அவர் காதல் திசை மாறுகிறது.


வெளியுலத்துக்கு சற்றும் குறைவில்லாத சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது இணையம். இங்கேயும் நல்லக் காதல்கள்ளக் காதல்டைம் பாஸ் காதல்ஷங்கர்-டைப் பளபள காதல்பாலா டைப் ’ஐயோ பாவ’ காதல்மேனன் டைப் ஸ்டைலிஷ் காதல் என எல்லா வித காதலும்  உண்டு.  கூடுதல் சுவாரஸ்யமாக இங்கே காதல் என்பது மற்றவர் பார்வையில் இரண்டு ஐடிகளுக்கு இடையே ஏற்படும் கஜகஜா. ஏன் காதலிப்பவர்களுக்குள் வரும் முதல் சந்தேகமேஇவர் உண்மையிலேயே எதிர்பாலினம் தானா என்பது தான். கிட்டத்தட்ட காதல் போல ஏதோ ஒன்று வந்து, நேரில் சந்தித்தப்பின் நண்பர்களாக இருப்போம் என்று மனசு மாறும் ‘மாற்றி யோசி’கள் புழங்கும் இடம். 

என் தோழியும் யாரையோ காதலிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தாள். எந்த ஐடியை என்று கண்டுபிடிப்பது எனக்கொன்றும் கஷ்டமாயில்லை. அதற்கெல்லாம் ஐடியாவும், ஆட்களும் உண்டு. இருவருக்கும் நேரில் சந்தித்ததும் மனது மாறிவிட்டது. காரணம் என்னன்னவோ சொன்னாள். எனக்கு புரிந்தது ஒன்று தான். முகப்பு படத்துக்கும் நேரில் பார்த்த ஆளுக்கும் சம்பந்தமில்லையாம். பெரும்பாலான காதல், நட்பாவதும் நட்பு, காதலாவதும் முகப்பு படத்துக்கும் நேரில் இருப்பதற்குமான ஆறு வித்யாசங்களில் தான். பெண் ஐடியிடம் நம்பர் வாங்கியப்பிறகு தான் எதையுமே சொல்லமுடியும் என்று சினிமா டாக்டர் போல சொன்ன நண்பனிடம், அப்பமட்டும் உனக்கு பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிடுமா என்றேன். அதான் வாட்ஸப் இருக்கில்ல, அதில் அரை நாளுக்கொரு முறை படத்தை மாற்றாவிட்டால் அது பெண்ணே இல்லைன்னு முடிவு பண்ணுவேன் என்கிறான், தீர்மானமாக.ஃபேஸ்புக்’கில் காதலை கவிதைகள் கொண்டே நிறுவுகிறார்கள். வெறும் நாலு வரி பத்தியை பிரித்து உடைத்து எட்டு வரிகளில் எழுதுகையில்இது கவிதைதானோ என்று நம் ஞானம் மீது தான் முதலில் சந்தேகம் வருகிறது. ஆயினும் சில வஸ்துகள் பரிதாபகரமானவை. உதாரணமாக நிலவை எந்த புண்ணியவான் காதலியை வர்ணிக்க பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தானோநீ நிலா நான் வானம்மஞ்சள் உடையில் வருமா நிலாஆச்சர்யகுறிநிலவுக்காவது கறை உள்ளது. நீ நிலவினும் தூய்மையானவள்வானிற்கு பொட்டு வைத்தால் அது நிலா ! நிலவுக்கு பொட்டு வைத்தால் அது நீ என்று சுமாராக ஐந்தாயிரம் நிலா கவிஞர்கள் முழு நேரமாக சுற்றிவருகிறார்கள். இன்னும், ‘தேசம் கடந்த நேசம்நேசம் கடந்த தேகம்’ / ‘காதலி கடவுளின் துளிகடவுள் காதலியின் துளி’ என்று பல புது புது பெர்மூடேஷன் காம்பினேஷன்கள் தட்டுப்படுகின்றன. 

ஆரம்பத்தில் அப்பாவியாக நிஜமாகவே காதலியை, காதலனை நினைத்து தான் உருகுகிறார்கள் என்றே நம்பிக்கொண்டிருந்தேன். பிறகுநான் பின் தொடரும், நன்கு உருகும் நிலா கவிஞர் ஒருவர் போடும் ’என்னவள்’ புகைப்படம் தமிழ் சினிமாவிலும் தலைக்காட்டத்தொடங்கியதும் தான் புரிந்தது. அடஇது லட்சுமி மேனனல்லவாதற்போது அவருக்கு வேறு காதலிஆனால் அதே நிலா கவிதை மட்டும் தொடர்கிறது!


ட்விட்டர் வேறு விதம். இங்கே 140 எழுத்துகளுக்குள் காதலை சொல்லியாக வேண்டும். #அவனதிகாரம், #அவளதிகாரம் என்று ஹேஷ்டேக்’கில்தேடுவதற்கு எளிதாக காதல் வரிகள் எழுதப்படுகின்றன. யார் தேடுவார்கள் என்று என் போன்றே விவரமில்லாமல் பதில் தேடாதீர்கள். நிஜ உலகில் கல்யாணம் ஆகிபேரன் பேத்தி எடுத்தப்பின் காதலியை நினைத்து உருகுபவர்களை பார்த்தால் மெர்சலாவீர்கள் என்றால்மன்னிக்கவும்நீங்கள் ட்விட்டருக்கு லாயக்கு இல்லை. இங்கே யாருவருக்குமானது காதல்! 

பாதி கண்அரை மூக்குதலைமுடியின் நுனிபுகை படர்ந்த படம் என்று பெண் பெரிய மனது பண்ணி வைக்கும் முகப்புப்படம் பார்த்தே தடால் என்று காதலில் விழும் அதிசயமெல்லாம் நிகழும் இடம். பெண்கள் வேறு வகை. “ கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்” என்று அவனதிகாரம் எழுதுகிறார்கள். அட.. என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டே நாள் முழுதும் அந்த வரியை ஓட விட்டால்கூடவே ஓரு ட்யூனும் கிட்டுகிறது. இது பிரபல சினிமா பாடலல்லவா? அதனால் என்ன, சினிமா பாடல்கள் பாடி தானே நாயகிகளும் காதலிக்கிறார்கள் என்று குழப்பமாக தெளிவானேன். 

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட காதல்கள் இருக்கின்றன. பெரும்பாலான திரைசின்னத்திரை பிரபலங்கள் ட்விட்டரில் இருக்கிறார்கள். காதலர் தினம் வந்தால்வாழ்த்துக்களோடு மொத்தமாக முத்தத்தையும் பறக்க விடுகிறார்கள். கடைக்கோடி ரசிகன் தனக்கே சொன்னது போல் கிறங்குகிறான். ரசிகையோ மோட்சமே பெறுகிறாள்.

அதிலும் காதலர் தினம் நெருங்க நெருங்க ஒரு மாதத்தில் எலெக்‌ஷனை எதிர்கொள்ளப்போகும் முண்ணனி கட்சி தொண்டனுக்கு இருக்கும் அதே பதற்றமான மனநிலையை இணைய இளைஞர்கள் அடைகிறார்கள். எப்போதும்தட்டில் அள்ளிப்போட்ட சாப்பாடுசாப்பிட்டதுபோக மிச்சமிருப்பதுஎச்சில் இலைபாதி குடித்த டீ  என புகைப்படம் பகிர்ந்தே பெரியாளான ஐடி கூட #அவளதிகாரம்அவன் - அதி -காரம் என கபீம்குபாம் கவிதையில் இறங்குகிறது. மற்ற நாட்களில்அதி முக்கிய இணைய வம்பானஎந்த ஐடிக்கும் எந்த ஐடிக்கும் கசமுசா என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீருகிறது. நல்லவேளையாக காதலர் தினம் வருகிறது. கூடவே எசப்பாட்டு பாடிக் களிக்கும் ஜோடி ஐடிகளும் வெளிவருகின்றன. இதில் அந்த இருவரையுமே தொடர்ந்தால் உடனே விஷயம் புரிபடும் என்பது தான் கொஞ்சம் சாலஞ்சிங்கானது. மற்றப்படி முழு நேரமாக இத்தகவல்களை மற்றவருக்கு தெரியப்படுத்தும் சேவையை செய்ய வாட்ஸப் க்ரூப்பும் இணையத்தில் இயங்குகிறது. 

என் ட்விட்டர் தோழி எமகாதகி. எல்லா வம்பும் விரல் நுனியில் வைத்திருப்பாள். எப்படி இதெல்லாம் கண்டுபிடிக்கிறாள் என்றால், எகப்பட்ட பிகு செய்தப்பின், கம்பேனி ரகசியத்தை போட்டுடைத்தாள். சம்பந்தப்பட்டவர் நேரக்கோட்டுக்கு செல்லவேண்டுமாம். அவர் யாரோடு அதிகம் பேசுகிறார் என்று பார்த்தால் க்ளூ கிடைக்குமாம். அதிலும் ஸ்மைலியின் நீளம், மொக்கை பதிவையும் ரீட்வீட் செய்திருப்பது என்று நிறைய சொல்கிறாள். குறிப்பாக நிறைய பேசிக்கொண்டிருக்கும் ஐடிகள் திடீரென்று இணையத்தில் பேச்சை நிறுத்திவிட்டால், அவர்கள் அடுத்த கட்டமாக நம்பர் வாங்கி அலைப்பேசியில் பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இப்படி ஒர் அறிவுக்கொழுந்தை நண்பியாக பெற்றிருக்காவிட்டால், என் பொதுஅறிவு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கவே பயமாயிருந்தது.மற்றுமொரு டெரரான ‘க்ரூப்பு’ இருக்கிறது. இதில் இடம்பெற சில விதிகள் இருக்கின்றன. பெண்களை குறைவாக பின் தொடர்ந்துஅல்லது தொடறவே மாட்டோம் என்று சூளுரைத்துகாதலர் தினம் நெருங்குகையில்இதெல்லாம் ஒரு பொழப்பா என்று  திட்டி எழுதவேண்டும். ’ஆஃப்பாயில்’ என்பது இந்த விஞ்ஞானிகள் பெண்களுக்கு வைத்த செல்லப்பெயர். ஒரு நாள் அந்த க்ரூப்பில் இருக்கும் நண்பர்அவர்கள் ரகசியம் வெளிவருகிறது. எந்த பெண் ஐடியுமே சீண்டாவிட்டால்எந்த பெண் ஐடியும் பேச பயப்படுவது போல் காட்டிக்கொள்ள வேண்டுமாம். போய் ஃபேஸ்புக் சுவற்றில் முட்டிக்கொண்டேன்.


இது ஒரு நண்பேன்’டா கதை. நம்மாள் பெயர் செந்தில். (பெயர் மாற்றப்படவில்லை. அதனால் பாதகமில்லை. இணையத்தில் இருக்கும் ‘செந்தில்’களை வைத்து ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துவிடலாம்.) ட்விட்டரில் அதர்வா டிபி வைத்திருக்கிறான். பெரும்பாலான இணைய ‘பிரபலங்கள்’ தொடர்கிறார்கள். மூன்று வருடத்தில் மொத்தம் ஐம்பதாயிரம் ட்வீட் போட்டிருக்கிறான். ஃபேஸ்புக்கிலும் பிரபலம். ’ஏண்டா பாத்ரூம் கீத்ரூம் போவியாமாட்டியா?’ என்று கேட்க நினைத்துகேட்டதில்லை. போன வருடம் காதலர்தினத்தன்று ஒரே ’ஃபீலிங்க்ஸ்’ ட்வீட்டாக போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தான். மறந்து போ என்று சொல்லாதேமரணித்து போ என்று சரியாக சொல் என்று அடுத்தடுத்த வரிகளில் கிலியூட்ட ’ஏன் மச்சிஉனக்கு தான் லவ்வரே இல்லையே.  காதலி இல்லைன்றதுக்கும்விட்டுட்டுப்போயிட்டான்றதுக்கும் வித்யாசம் இருக்கு. நீ ஏன் ஃபீலாவுறஇன்னும் லூசாயிட்டயா?’ என்று கேட்டதில் (என்று தெரியாத்தனமாக கேட்டதில்) பொங்கிவிட்டான். இங்க எனக்கப்புறம் ஐடி ஆரம்பிச்சவங்களுக்கு கூட ஆள் இருக்கு. என்னை பார்த்தியாஒரு பெண் ஐடி கூட கண்டுக்கலஉனக்கு இன்னும் யாரும் செட்டாவலையான்னு அங்கிள்ஸ் கூட கிண்டல் பண்றாங்க. தனியொருவனுக்கு காதலி இல்லையெனில் ஜகத்தினை அழித்திடவேண்டும் என்று என் மொபைல் டேட்டா லிமிட்டை புலம்பியே அழித்து தீர்த்தான். ஏன் மச்சிஇணையத்துல காதல் எல்லாம் சரிபடுமாஐடியெல்லாம் ஆணா பொண்ணானே சிஐடிக்கே தெரியாதுஏன் இந்த வீண் வேலை என்றால், அட ரைமிங் அறிவுரை நல்லாயிருக்கு. நாளைக்கு ட்வீட்டா போடு ரீட்வீட் பண்றேன். இல்லஸ்டேடஸா போடுலைக் போடுறேன் என்று துன்பத்திலும் பெரிய மனது பண்ணத்தயாரானான். சரி தான்நமக்காக எவ்வளவோ ரீட்வீட் செய்திருக்கிறான். பிரதிபலனாக எதாவது செய்வோமென்று  ஒரு வருடம் அயறாது உழைத்ததில்தற்போது அவனுக்கு ஆயிரம் பேர் பின் தொடரும்விகடனில் மூன்று முறை வலைப்பாய்ந்தப்ரேமம் மலர் டிபியுடன் ஒரு காதலி கிடைத்து விட்டாள். அப்படியே எனக்கு  ஆயிரம் பேர் பின் தொடரும்விகடனில் மூன்று முறை வலைப்பாய்ந்தப்ரேமம் மலர் டிபியுடன் ஒரு பிரபல ‘ஃபேக்’ ஐடியும்!

1 comment: