Sunday, 18 December 2011

நாங்களும் பிளான் பண்ணுவோமில்ல???

ஒரு மாதம் முன்பு -
என் கணவர் - 'ஸ்ருதிக்கு எப்போ லீவ் விடறாங்க?'
நான் - ஏன்பா?
அவர் - நாம  சிங்கப்பூர் போகலாம்னு பார்க்கறேன்.
நான், குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் இல்லையே என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

10 நாட்களுக்கு பிறகு -
அவர் - நாம ஸ்ருங்கேரி(கர்நாடகா) போகலாமா லீவுக்கு ?
நான் -  சிங்கப்பூர் என்னாச்சு?
அவர் - எனக்கு ஒரு வாரம் லீவ் எடுக்கறது கஷ்டம்..
நான் - ஓகே.

இன்னும் சில நாட்களுக்கு பின்..
நான் - மங்களூர் கு டிக்கெட் எடுத்தாச்சா?
அவர் - அது, இப்போ அங்க சீசன் சரி இல்ல..
நான் - அப்போ, லீவ் ?
அவர் - ம்ம்..சுருதிகு வண்டலூர் ஜூ காட்டினா என்ன?

நான் ஒரு மாதம் முன்பே சிதம்பரம் போக டிக்கெட் புக் பண்ணியாச்சு. அத கடைசி நிமிஷம் வரை மாத்தர உத்தேசம் இல்ல. இதை சொன்னதும் என் கணவர் முகத்தில் client டிடம்  extra billing ஐ ஓகே பண்ணின நிம்மதி!

என்னை போலவே எல்லா 'சாப்ட்வேர் மனைவிகளும்' அப்பாவி(!)யாக தான் இருக்கிறார்களா என்று யாரவது சொன்னால் தேவலை..

பின்குறிப்பு - நான் ஊருக்கு போனதும், ஜனகராஜ் போல 'என் பொண்டாட்டி ஊருக்கு போய்டா !' என்று கத்துகிறாரா என்று மாமனாரை பார்க்க சொல்லி இருக்கிறேன். ..

ஹாலிடே ஸ்பெஷல்

லீவ் நாட்களில் மத்தியான வேளையை ஸ்ருதிக்காக ஒதுக்குவேன். அவை இவ்வாறு போகும்--

இன்று அவள் டாக்டர் - அதனால் நான் பேஷன்ட், குட்டி தம்பி-ஜூனியர் டாக்டர். நான் மிகுந்த வயற்று வலியுடன்  ஹாஸ்பிடலில் நுழைகிறேன். எனக்கு விக்ஸ் தடவி, ஊசி போட்டு, மாத்திரை மற்றும் சிரப் கொடுத்து ஆபரஷனும் செய்கிறாள்..முடிவில் ஒரு ஓரமாக போய் எதோ எழுதுகிறாள்.  ஜூனியர், அதை அறிய சற்றுமுன் ஆபேரஷன் செய்த இடத்தில் ஏறி ஓடுகிறான்..

ஸ்ருதி -   பேஷன்ட், இந்தாங்க. (ஒரு பேப்பரில் சில மருந்து பெயர்கள்).எங்க pharmacy லே வாங்கிடுங்க.
நான் - ஓகே டாக்டர்,fees .?
ஸ்ருதி - நான் ஏழைகள்(??) கிட்ட fees வாங்கறதில்ல..

மற்றொரு நாள் -

இப்போது நான் beauty parlour கு செல்கிறேன். எனக்கு facial செய்ய போவதாக அறிவிக்கிறாள். கிரீம், lotion , பவுடர், லிப் ஸ்டிக் என கையில் அகப்பட்டதை எனக்கு பூசுகிறாள். முடிவில் என்னை பார்த்து 'அம்மா, நீ ஸ்னேஹா போல ஆகிட்ட ' என்கிறாள் .( கண்ணாடியை பார்த்தால் நான் 'சந்திரமுகி' போல இருக்கிறேன்..)இம்முறை தவறாமல் பணம் பெற்று கொள்கிறாள்!

பெரும்பாலும் -

அவள் டீச்சர்.நான் பிரின்சிபால் அல்லது ஆயாம்மா! தம்பி, ஸ்டுடென்ட்.அவளுக்கு தேவை - புடவை கட்ட ஒரு துப்பட்டா மற்றும் ஒரு handbag .. ( இந்த விளையாட்டிற்கு என் மற்ற சாமான்கள் பிழைத்து கொள்ளும். )அவள் அடிக்காமல், திரும்ப திரும்ப சொல்லி தரும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்..

இன்னும் புடவை கடை, சூப்பர் மார்க்கெட் என்று விதவிதமாய் விளையாடுகிறாள். நானும் 'time machine' ல் ஏறாமலே  ஏழு வயதிற்கு போகிறேன்..

Tuesday, 13 December 2011

Parent-teacher meetings and Me

So far, its been a nightmare to attend the parent-teacher meetings. Not to blame my daughter, but her teacher being so good at complaining..I would always be sitting in front of her like a diarrhea patient,  ready to run away any minute.

Every time it would be like -
teacher: So, you have decided to keep her hair frizzy?
or
             your daughter is very talkative. I guess you don't allow her to talk at home! (now, what kind of logic is this??)
or
            Her handwriting is very bad! (Me and my husband would just disbelieve our ears. so far we are so proud that her handwriting is better than ours)
me: but mam, she is writing neatly..
teacher: No,No. You see, the letters are not touching the appropriate lines..Give(Get?)some practice.

and on and on..

My opinion about her changed slowly as one day Sruthi told me that, her teacher shared her lunch box with her as hers fell down on the ground.
On another time - when I asked Sruthi to accompany me to buy some veggies, she refused to come by bike. She lectured me on how we are polluting our air by depending entirely on motor vehicles..I finally walked down as I don't want her to go up to Ozone layer to buy some curry leaves..

Finally understood that , part of a teacher is a critic!  I have been so much into how the teacher says than what she says..
This time,  I am going to surprise some moms by keeping a happy face for the teacher. (and that is what Sruthi does)

Monday, 5 December 2011

superstar கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பொதுவாக பெண்களின் வயதை கண்டுபிடிக்க " உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?" என்று கேட்டு பாருங்கள். சிவாஜி,எம்.ஜி.ஆர் என்று சொன்னால் ஒரு 50+ என்றும், கார்த்திக் , மோகன் வகையறா என்றால் 35+ என்றும் விஜய், அஜித் என்றால் 25 - 35 என்றும் வயதை கணிக்கலாம். பதில் "ரஜினி" என்றால் அந்த பெண்ணின் வயது '6ல் இருந்து 60 வரை' எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

எனக்கு ரஜினி பிடிக்க காரணம் ' காதலின் தீபம் ஒன்று' பாடலே. இளையராஜாவின் இன்னிசையும்,SPB யின் தேன்குரலையும் மீறி அதில் தெரிவது "ரஜினி" மட்டுமே.

மற்றொரு காரணம், ரஜினி படம் பார்க்க கர்சிப் முதல் ஜமுக்காளம் வரை எடுத்து கொண்டுபோய் பிழிய பிழிய அழத் தேவையே இல்லை. பெரும்பாலான படங்கள், தலைவர் வாழ்கையில் ஜெயித்து, காதலியை கரம் பிடித்து, வில்லனை(பெண்ணை பெற்றவர்?)  திருத்தி அல்லது போலீசில் பிடித்து கொடுத்து நமக்கும் சில அட்வைசுடன் --'சுபம்' ஆக முடியும். ( நடுவே punch dialogue மற்றும் தனக்கு ஏன் தமிழ் அல்லது தமிழ் நாடு பிடிக்கிறது என்று ஒரு பாடல் + 3 காதல் பாடல்கள் + 1 சோகத்துடன் கூடிய  அட்வைஸ் பாடல் சேர்த்து கொள்ளவும்.)   கொடுத்த காசுக்கு, நம்மை சந்தோஷத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்..

ரஜினி போன்று வேறு யாராவது ஒரு நடிகர் ஸ்டைல் செய்தால், அது மிகவும் கோமாளிதனமாகவே இருக்கிறது!! நல்ல வேலையாக அந்த நடிகர் இப்போது வேறு 'இம்சை'க்கு மாறி விட்டார்..

இத்தனை லட்சம் பேர் விரும்பும் ஒருவர் மிக அடக்கமாக இருப்பதால், அவர் சூப்பர் நடிகரோ இல்லையோ கண்டிப்பாக சூப்பர் மனிதர் தான் !

இன்று FM ரேடியோ முதல் தொலைக்காட்சி வரை ரஜினியின் பிறந்தநாளை நினைவூட்டிக்கொண்டே இருப்பதால், என் பிறவி பெருங்கடலை கடக்க நானும் இந்த பதிவின் மூலம் வாழ்த்துகிறேன்..

 மேலே சொன்ன லட்சம் பேரில் ஒருத்தியாக திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Friday, 2 December 2011

Is FDI (in retail ) good for India?

Bringing Walmart/ Tesco to India - How good is the choice??
Though it would take time, surely these big giants are going to wipe out all other small shops in India.( we have seen what happened to our Bovanto and Thumbs up because of Pepsi and Coke)

From a consumer point of view :-
First, most of our poor & middle class people would try to buy things in small quantities. (Here it is possible to buy groceries even in 50 gms.) But, I still remember my first shopping experience in US. Being newly married I was blinking at half kilo of mustard in my hand and wondering whether to use it for rest of my life.

Secondly, many of them keep accounts and buy things purely based on mutual trust. and how about mega shops? There will be a sales man staring at your back and enough hidden cameras silently watching  and waiting for you to steal a thing or two.

Third, Are they going to create jobs? maybe..But, many people are going to loose their freedom of being an enterpreneur which even our tech savvy engineers don't have..

Government says prices would come down. But from my experience, we will always buy more things in these shops than, what we are intended. Also unless you are level-headed, you would fall for "Buy 5 liters of coke and get one rat poison free!!" kind of marketing gimmicks.

Finally, the kirana shop and its owner are part and parcel of our every day life. Though it sounds like a line taken out from R.K.Narayan's book, we can't deny that the shopkeeper (remembering &)calling our children by name is something special in India.

There is only one advantage though - Walmart would be a perfect place for family hangout in the week-ends, unless your children don't listen to your no-nos.

May be my little knowledge in economics keeps me one sided. Please write to me.. I am all ears.